Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 6, 2017

திமுகவில் பதவி தருவியா, மாட்டியா? சின்ன அக்காக்கிட்ட போகட்டுமா..? அஞ்சாநெஞ்சன்!


திமுகவில் அஞ்சாநெஞ்சன் என்று செல்லமாக அழைக்கப்படுபவர், மு.க. அழகிரி. இவர் தான் உண்டு தன்வேலையுண்டு என்றுதான் இருந்தார்.
தென் மாவட்டங்களில் தனக்கு வேண்டியவர்கள் சிலருக்கு அப்பாவிடம் பேசி சீட் வாங்கி தருவது. தனக்கு வேண்டியவருக்கு அமைச்சா் பதவி வாங்கி தருவது என்பது போன்ற சின்ன, சின்ன பணிகளை திமுகவில் செய்து வந்தார்.
யாரையும் ஒரு முறை சந்தித்தால் அவரை எளிதில் மறக்க மாட்டார். பின்பு எப்போதாவது சந்திக்க நேரிட்டால் பெயரைச் சொல்லியே அழைப்பார்.
இந்த பழக்கம் திமுக தலைவர் கருணாநிதியிடம் உண்டு. இதே பழக்கம் மு.க.அழகிரியிடம் இருந்ததால் தென் மாவட்டங்களின் தளபதியானார்.
மு.க.ஸ்டாலினே தனக்குதான் தலைவர் பதவி வரவேண்டும் என்று ஒரு பத்திரிக்கையை கருத்து கணிப்பு நடத்த சொன்னார்.
பல்வேறு கருத்து கணிப்புகளை வெளிட்டு வந்த அந்த பத்திரிக்கை திமுகவின் அடுத்த தலைவர் யார் என்பது குறித்தும் கருத்து கணிப்பு நடத்தியது.
அதில் மு.க.ஸ்டாலினை முன்னிலைப்படுத்தியது. அழகிரியை பின்னுக்கு தள்ளியது. மதுரையில் அந்த பத்திரிக்கைக்கு தீ வைக்கப்பட்டது. ஊழியர்கள்  இறந்தனர்.
ஸ்டாலின் பேச்சை கேட்டதால் பெரிய இழப்பை அந்த பத்திரிக்கை நிறுவனம் சந்தித்தது. அவர்களுக்கு அன்று தொடங்கிய சரிவு திமுகவில் இன்றும் எழும்ப முடியவில்லை.
இந்த நிலையில் திமுகவுக்கும், அழகிரிக்கும் சண்டை மூண்டது, கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்டார் அழகிரி.
இன்று வரை கட்சியில் சேர்த்ததாக தெரியவில்லை. கருணாநிதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட போது மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.
ஆனால், பொதுக்குழுவுக்கு அழைப்பு இல்லை. புதிய பொறுப்பு எதுவும், அவருக்கோ, அவரது மகனுக்குக் கூட தரவில்லை.
இந்த நிலையில் இனி என்ன செய்யலாம் என்கிற திட்டத்தில் இருக்கும் அழகிரிக்கு சசிகலாவிடம் இருந்து தொடர்ந்து அழைப்பு வந்த வண்ணம் உள்ளது?
இதனையே காரணமாக காட்டி திமுகவில் நிரந்தர இடம் பிடிக்க அழகிரி முடிவு செய்துள்ளதாகவும், இதுவும் பலிக்கவில்லை என்றால் தென் மாவட்டம் எப்போதும் அது அதிமுகவின் கோட்டையாக உள்ளது.
தென் மாவட்டங்களில் கட்சி பாகுபாடு இல்லாமல் பழகும் நபர்களில் முதன்மயைாக இருப்பவர் அழகிரி. திமுகவில் இருந்த செல்வாக்கு குறையாமல் அதிமுகவிலும் அப்படியே செய்கிறோம் என்று மன்னார்குடி வகையறாக்கள் வலைவீசுகிறது.
இதனால் சின்ன அக்காவிடம் செல்வோம் என்று அவரும், அவரது ஆதரவாளா்களும் முடிவு செய்து இருப்பதாகவும் மதுரை திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன?

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.