Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 13, 2017

ராஜினாமாவிற்குப் பின் தலைமைச் செயலகம் செல்லும் ஓபிஎஸ்... என்ன நடக்கும்?


முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 5ம் ஆம் தேதி ராஜினாமா செய்த பின்னர் இன்று தலைமை செயலகம் செல்ல உள்ளார்.

ஓ.பன்னீர் செல்வம் இன்று தலைமைச் செயலகம் செல்லப்போவதாக கூறியுள்ளார். ராஜினாமா செய்த பின்னர் பத்து நாட்கள் கழித்து தலைமைச் செயலகம் செல்ல உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்எல்ஏக்களை தொகுதிப் பக்கம் அனுப்பி வைக்க தயாரா என்றும் ஓ.பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டசபை கூட்டத் தொடர் முடிந்த பின்னர் கடந்த 5ஆம் தேதியன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஓ.பன்னீர் செல்வம். 7ஆம் தேதியன்று இரவு ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் செய்த ஓபிஎஸ், தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தாக கூறினார். இது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது.

இந்த நிலையில் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்துள்ளது. ஓபிஎஸ் தன் இல்லமான தென்பெண்ணை இல்லத்தை விட்டு வேறு எங்கும் செல்வதில்லை. ஒரே ஒரு முறை ஆளுநர் இல்லம் சென்றதோடு சரி. அவரைத் தேடி தொண்டர்களும், ஆதரவாளர்களும் வருகின்றனர்.

சசிகலா போராட்டம்
ஜெயலலிதா இருந்த வரை கோவில்களுக்கு மட்டுமே போன சசிகலா, இப்போது ஜெயலலிதா நினைவிடம், கட்சி தலைமை அலுவலகம், கூவத்தூர் ரிசார்ட் என ஓடி வருகிறார். முதல்வர் பதவியில் அமரும் வரை ஓயமாட்டேன் என்று கூறி வருகிறார் சசிகலா. நாங்கள் சிங்கம் போன்றவர்கள் என்றும் பேட்டி தருகிறார்.

ஓபிஎஸ் பதிலடி
இதற்கு பதிலடி தரும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதா முதல்வராக வேண்டும் என்றுதான் மக்கள் வாக்களித்தனர் சசிகலா முதல்வராவதை எம்.எல்.ஏக்கள் விரும்பவில்லை என்றார். சசிகலா ஏன் கூவத்தூர் சென்று வருகிறார் என்றும் கேள்வி எழுப்பினார்.

எம்எல்ஏக்களை வெளியே விடுங்கள்
கூவத்தூரில் உள்ள எம்.எல்.ஏக்கள் என்னுடன் பேசிக் கொண்டுள்ளனர் ஒவ்வொரு எம்.எல்.ஏவுக்கும் 4 பேரை காவலுக்கு நிறுத்தியுள்ளனர் அம்மா ஏற்படுத்திய ஆட்சியைக் காப்பாற்ற வேண்டிய எண்ணம் மட்டுமே என்னிடம் உள்ளது. எம்எல்ஏக்களை சுதந்திரமாக தொகுதிக்கு அனுப்பி வைத்து மக்களின் கருத்துக்களை கேட்டு வரச்சொல்லாமே என்று கூறினார்.

தலைமைச் செயலகம் செல்வேன்
தொடர்ந்து பேசிய அவர், இன்று தலைமைச் செயலகம் செல்ல இருப்பதாகவும் கூறினார். கடந்த 5ஆம் தேதி ராஜினாமா செய்த ஓ.பன்னீர் செல்வம் வீட்டை விட்டு எங்கும் செல்லவில்லை. புதன்கிழமையில் இருந்து தனது ஆதரவாளர்களையும், தொண்டர்களையும் சந்தித்து பேசி வருகிறார். இந்த நிலையில் 10 நாட்களுக்குப் பிறகு இன்று தலைமைச் செயலகத்திற்கு செல்கிறார் ஓபிஎஸ்.

முக்கிய கையெழுத்து
முதல்வர் ஓபிஎஸ் தலைமைச் செயலகம் செல்ல உள்ளதாக அறிவித்துள்ளது,சசிகலா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என பன்னீர் செல்வம் தெரிவித்திருந்தார். ஒருவேளை இன்று தலைமைச் செயலகம் செல்ல இருக்கும் முதல்வர் ஜெ., மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைப்பதற்கான பைல்களில் கையெழுத்திடலாம் என கூறப்படுகிறது.

பலத்த எதிர்பார்ப்பு
சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜை இடமாற்றம் செய்தும்,சசிகலாவுக்கு ஆதரவாக செயல்படக் கூடிய அதிகாரிகளை வேறு பணியிடங்களுக்கு மாற்றியும் உத்தரவிட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமைச் செயலகம் செல்வது ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.




No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.