February 21, 2017
பாட புத்தகத்தில் ஜெ.,வின் படத்தை நீக்கியவர்கள் கைது
சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளியான ஜெ.,வின் புகைப்படத்தை பாட அகற்றிய மக்கள் அதிகாரம் அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சியில் உள்ள மரக்கடையில் அரசு பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு சென்ற மக்கள் அதிகாரம் அமைப்பினர் மாணவர்களிடம் இருந்து புத்தகங்களை வாங்கினார்கள். அதிலிருந்த ஜெயலலிதாவின் படத்தை மறைத்து திருவள்ளுவர் படத்தை ஓட்டினார்கள்.
சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் புகைப்படம் பாட புத்தகத்தில் இடம்பெற்றால் மாணவர்களுக்கு தவறான பாடம் கற்பிக்கப்படும் என்று கூறி அங்கிருந்த மாணவர்களிடம் இருந்து புத்தகங்களை வாங்கி திருவள்ளூவர் படத்தை மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஒட்டினார்கள்.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜெ.,யின் படத்தை அகற்றுவதை நிறுத்துமாறு கூறினார்கள் ஆனால் மக்கள் அதிகாரம் அமைப்பினர் அதற்கு மறுக்கவே போலீசார் அவர்களை கைது செய்தனர்.
பாட புத்தகத்தில் ஜெ.,வின் படத்தை நீக்கியவர்கள் கைது
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 21, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 21, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.