February 13, 2017
ஆளுநர் வித்யாசாகர் ராவ் பாரபட்சமின்றி பணியாற்றுகிறார்: வெங்கய்யா நாயுடு
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பாரபட்சமின்றி செயல்படுகிறார் என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பெங்களூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தமிழக ஆளுநர் அரசியல் நிலவரம் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.
அரசியல் சட்டப்படி அனைத்தையும் ஆராய்ந்து முடிவு எடுப்பார். எனவே அவருக்கு தேவையில்லாமல் எதிர்க்கட்சியினர் உள்நோக்கத்துடன் பேசி வருவது வேதனை அளிக்கிறது.
தமிழகத்தில் அரசியல் சாசனப்படி முதல்வர் ஆட்சி செய்து வருகிறார் எனவே ஆட்சி நடைபெறவில்லை என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது.
மேலும், அதிமுக உட்கட்சி சண்டையை அவர்களே சரிசெய்து கொள்வார்கள். இதில் பாஜக குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க விரும்பவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆளுநர் வித்யாசாகர் ராவ் பாரபட்சமின்றி பணியாற்றுகிறார்: வெங்கய்யா நாயுடு
Reviewed by மறத்தமிழன்
on
February 13, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 13, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.