Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 26, 2017

மதுரையில் மணமணக்கும் பிரமாண்ட பிரியாணி திருவிழா!


மதுரை மாவட்டத்தில் திருமங்கலத்திலும், தெற்கு வாசல் பகுதியிலும் பிரியாணி திருவிழா மணமணக்க கொண்டாடப்பட்டது.
மதுரை திருமங்கலத்தை அடுத்துள்ள வடக்கம்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற முனியாண்டி சாமி கோயில் திருவிழா நடைப்பெற்று வருகிறது. இந்த திருவிழா கிட்டத்தட்ட 80 ஆண்டுகளாக பிரியாணி திருவிழாவாக நடந்து வருகிறது. நேற்று நடந்த திருவிழாவில் பல அண்டாக்களில் பிரமாண்டமாக பிரியாணி தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.அதே போல், மதுரை தெற்குவாசலில் உள்ள பள்ளிவாசலில் கஸ்தூரியை முன்னிட்டு காலைமுதல் 50க்கும் மேற்பட்ட அண்டாவில் மட்டன் பிரியாணி தயாரிக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த மக்களுக்கு பிரசாதமாக பிரியாணி வழங்கப்பட உள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த வடக்கம்பட்டியில் பிரசித்தி பெற்ற முனியாண்டி சாமி கோயிலில், கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக, பிரியாணி திருவிழா மிகப் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று பிரமாண்டமான முறையில் பிரியாணி சமைத்து அனைவருக்கும் வழங்கி அந்த வட்டாரத்தையே மணக்கச் செய்தார்கள். இந்நிலையில், மதுரை தெற்குவாசல் பள்ளிவாசல் கந்தூரியை முன்னிட்டு, ஐம்பதுக்கும் மேற்பட்ட தேக்சாவில் பிரமாண்ட பிரியாணி தயாரிக்கும் பணி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. காலை முதல், மட்டன் பிரியாணியும், தால்சால்னாவும் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட உள்ளன

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.