Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 27, 2017

ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கைவிடுக.. மோடியிடம் எடப்பாடியார் நேரில் கோரிக்கை


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியிடம் நேரில் கோரிக்கை வைத்தார்.

பிரதமர் மோடியை நேரில் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

டெல்லியில் பிரதமர் மோடியின் இல்லத்திற்கு இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்று அவரை சந்தித்தார். அப்போது நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அவர் பிரதமரிடம் வைத்தார்.

முக்கியமாக புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் மத்திய அரசு அறிவித்துள்ள ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கைவிட அவர் கோரிக்கை வைத்தார். அதுதவிர வறட்சி நிவாரண நிதியை வழங்க வேண்டும், வர்தா புயல் நிவாரண நிதியை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவர் பிரதமர் மோடியிடம் வைத்தார்.
முதல்வரின் கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களுக்கு பிரதமர் அலுவலகத்தால் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.