Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 12, 2017

எல்லாம் சரிங்க, இப்போ தமிழகத்தை ஆள்வது யார் ? மோடியா ? ஆளுநரா ?


எட்டுக் கோடி மக்களின் குடுமியை  ஆளுநருன்னு ஒரு ஆளு டெல்லியின் முகவரா  வந்து நம்மூரிலே உட்கார்ந்து கொண்டு ஆட்டுறாரு பாரு.

அப்பப்ப இந்த மாநில சுயாட்சிக்காரர்களெல்லாம் கையைக் கட்டி வாயைப் பொத்திக் கொண்டு ஆடுதுக..!
தமிழ்தேசிய இனத்தின் ஆட்சியை முடிவு செய்வது  எட்டுக் கோடி தமிழ் மக்களின் பிரதிநிதிகளா?

டெல்லியின் ஏஜெண்டா? ஒரு தேசிய இனத்தின் இறையாண்மை என்பது தமக்கான ஒரு அரசை தாமே முடிவு செய்வதுதான்.

ஆனால், நடக்கும் நிகழ்வுகளில் நாம் காண்பது என்ன? இறைவனிடம் அருள் வேண்டி  நிற்பது போல ஆளுநர் மாளிகையை அண்டிக் கிடப்பது ஏன்?

சதி செய்து ஆதிக்கம் செய்யும்  பாஜகவை அம்பலப்படுத்த அஞ்சுவது ஏன்? டெல்லியின் அதிகாரம் அவ்வளவு மிரட்டுகிறது.

இந்த அடிமைகள் முதல்வராகி மக்களுக்காக செயல்படுவார்களா? ஏகாதிபத்திய டெல்லிக்கு அடிபணிவார்களா?

தமிழக மக்களால்  புறந்தள்ளப்பட்ட பாஜக இன்று  தமிழக மக்களின்  ஆட்சியை ஆட்டிப் படைக்கிறது!

இதையே காங்கிரஸ் முன்பு செய்து வந்தது. நமக்குத் தேவை இறையாண்மை கொண்ட அரசு.

அதுதான் ஜனநாயகம். வாக்களிப்பது என்பது நாம் முடிவெடுப்பது. டெல்லி என்றால் அது சர்வதிகாரம்!

நன்றி: பொதுஜனம்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.