February 6, 2017
சசி முதல்வராவதால் சோழர் காலம் மீண்டும் திரும்பிருச்சாம்.. இனோவா சம்பத் ஜால்ரா கமெண்ட்
சசிகலா ஒரு ராஜதந்திரி என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். சோழர் காலம் மீண்டும் திரும்பியுள்ளது என்றும் அவர் சசிகலா முதல்வராவது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
நாஞ்சில் சம்பத் எது பேசினாலும் ஜால்ரா சத்தம் கொஞ்சம் ஓவராத்தான் கேட்கும். கேட்பவர்கள் காது ஒரு சில சமயம் கிழிந்து தொங்கும். பல வேளையில் காதில் இருந்து ரத்தம் கொட்டும்.
அப்படித்தான் கேட்பவர்கள் காதில் ரத்தம் கொட்டக் கொட்ட பேசியிருக்கிறார் இனோவா புகழ் நாஞ்சில் சம்பத். ஜெயலலிதா மறைந்த 2வது மாதத்தில் முதல்வர் ஆவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளார் சசிகலா. அதற்காக அவசர அவசரமாக எம்எல்ஏக்கள் கூட்டத்தை நடத்தி சட்டசபைக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டும் விட்டார்.
இனி எப்போது வேண்டுமானாலும் சசிகலா முதல்வராகலாம். எப்போது வேண்டுமானாலும் தமிழக மக்கள் செத்துத் தொலையலாம் என்ற அளவில் சமூக வலைத்தளங்களில் கேலியும் கிண்டலும் சுற்றி வரும் நிலையில், "சசிகலா ஒரு ராஜதந்திரி.. அவரின் ஒவ்வொரு நடவடிக்கையும் எதிரிகளை திகிலடையச் செய்யும்" என்று அதிமுக நாஞ்சில் சம்பத் கூறியிருக்கிறார்.
உண்மையில் அவர் சொன்ன இந்த வரிகள்தான் மக்களை திகலடையச் செய்துள்ளது என்று நக்கலடித்து கொண்டிருக்கிறார்கள் மக்கள். இன்னொரு தாமாஷையும் இனோவா சம்பத் செய்திருக்கிறார். "சோழர் காலம் மீண்டும் திரும்பி இருக்கிறது". இந்த கருத்துக்கு எங்க போய் முட்டிக் கொள்வது என்று தெரியவில்லை என்கிறார் நெட்டிசன்கள்.
ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுகவில் இருந்து விலகிவிடுகிறேன் என்று பிகு செய்தீர்களே நாஞ்சில் சம்பத்.. அதனை அப்படியே ஃபாலோ செய்யக் கூடாதா.. என்று காதில் ரத்தம் வழிய வழிய மக்கள் சொல்வது உங்கள் காதில் விழவில்லையா?
சசி முதல்வராவதால் சோழர் காலம் மீண்டும் திரும்பிருச்சாம்.. இனோவா சம்பத் ஜால்ரா கமெண்ட்
Reviewed by மறத்தமிழன்
on
February 06, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 06, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.