Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 6, 2017

அமெரிக்க அதிபராக தொடர டொனால்டு டிரம்ப்க்கு மக்கள் கடும் எதிர்ப்பு கருத்து கணிப்பில் தகவல்


அமெரிக்காவின் அதிபராக தொடர டொனால்டு டிரம்ப்க்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பது சமீபத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் 45வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதிலிருந்து பல அதிரடிகளை மேற்கொண்டு வருகிறார்.

அதில் ஈராக், சிரியா உட்பட ஏழு நாடுகளிலிருந்து மக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்ததும் அமெரிக்கா மெக்சிகோ எல்லை இடையே சுவர் கட்டுவது போன்ற அறிவிப்பும் முக்கியமானதாகும்.

இந்நிலையில் மக்கள் மனநிலை தற்போது டிரம்ப் மீது எப்படி இருக்கிறது என்பதை அறிய தி பப்ளிக் பாலிஒசி போலிங் (The Public Policy Polling)அமைப்பு அமெரிக்க மக்களிடம் மெகா சர்வே ஒன்றை நடத்தியது.

அதில், 40 சதவீதம் பேர் டிரம்ப் மீது குற்றம்சாட்டியும், அவர் பதவி விலக வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

48 சதவீதம் பேர் இது அவர் பதவி விலக தேவையில்லை என கூறியுள்ளார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக 52 சதவீதம் பேர் பராக் ஒபாமாவே தங்கள் அதிபராக இருந்திருக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.