February 26, 2017
ராணுவ பணிக்கான தேர்வு! ‘‘வினாத்தாள் அவுட்’’ அங்கேயுமா!
இந்திய ராணுவ பணியாளர் தேர்வுக்கான வினாத்தாள் முன்னரே வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணுவ தேர்வு வினாத்தாள் வெளியான தகவல் கிடைத்ததை அடுத்து தானே குற்றப்பிரிவு காவல்துறையினர் நேற்று இரவு நாடு முழுவதும் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர், புனே, நாசிக் மற்றும் கோவா ஆகிய பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது.
சோதனையின் போது நடத்திய விசாரணையில் மாணவர்கள் இரண்டு லட்ச ரூபாய் கொடுத்து வினாத்தாளை வாங்கி, லாட்ஜில் உட்கார்ந்து அதற்கான விடைகளை எழுதியது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு பின்னால் ராணுவ அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ராணுவ பணியிடங்களுக்கான தேர்வு இன்று நடைபெறும் நிலையில் மகாராஷ்டிராவில் உள்ள 9 தேர்வு மையங்களில் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
ராணுவ பணிக்கான தேர்வு! ‘‘வினாத்தாள் அவுட்’’ அங்கேயுமா!
Reviewed by மறத்தமிழன்
on
February 26, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 26, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.