February 22, 2017
லஞ்சம் கேட்டு மிரட்டிய காவலர்கள்! லாவகமாக மாட்டிவிட்ட காதலர்கள்!
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் பூங்காவில் அமர்ந்திருந்த காதல் ஜோடியை சீண்டிய காட்சியை பாதிக்கப்பட்ட இளைஞர் ஃபேஸ்புக் லைவ்ஸ்ட்ரீமிங்கில் ஓடவிட்ட வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் விஷ்ணு விச்சு மற்றும் ஆர்த்தி ஆகியோர் திருவனந்தபுரத்தில் உள்ள பூங்கா ஒன்றில் அமர்ந்து பேசி கொண்டு இருந்திருக்கிறார்கள்.
அப்போது அங்கே வந்த 2 மகளிர் காவல் அதிகாரிகள், இருவரையும் காவல் நிலையம் வருமாறு மிரட்டியுள்ளனர். எதற்காக வரவேண்டும் என்று விஷ்ணு கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு பொது இடத்தில் ஆபாசமாக நடந்துக் கொண்டதால் இருவரும் வரவேண்டும் என மிரட்டியதுடன் மற்ற இரண்டு ஆண் காவலர்களின் உதவியுடன் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
காவல்நிலையத்தில் வைத்து காதலர்களை மிரட்டியிருக்கிறார்கள். பின்னர் இருவரும் ரூ.200 அபராதம் செலுத்த வேண்டும் என்றும் துன்புறுத்தியுள்ளனர்.
காவல்யிதுறையினரின் அத்துமீறலை சகிக்க முடியாத விஷ்ணு தனது செல்போனில் இருந்து இந்த காட்சிகளை ஃபேஸ்புக்கில் லைவ் செய்து, காவலர்களின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ பகிரப்பட்டதையடுத்து பல்வேறு குழுவினரும் காவல்துறையின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.
இருவரும் விரைவில் திருமணம் செய்துக்கொள்ளவிருக்கிறோம். ஆகையால் இந்தச் சம்பவம் எங்களுக்கு ஒருபொருட்டல்ல என அப்பெண் கூறியுள்ளார்.
இது குறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், உரிய புகார் பெறப்பட்ட பின்னர் தான் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது மிகவும் கலாச்சாரம் சார்ந்த பிரச்சனை என்பதால் காவலர்கள் வேண்டுமென்றே இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுப்பட்டிருக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.
லஞ்சம் கேட்டு மிரட்டிய காவலர்கள்! லாவகமாக மாட்டிவிட்ட காதலர்கள்!
Reviewed by மறத்தமிழன்
on
February 22, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 22, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.