Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 17, 2017

தினமும் இத குடிச்சா, இனிமேல் முதுகு வலியே வராது !


பலருக்கும் கடுமையான இடுப்பு அல்லது முதுகு வலி இருக்கும். இப்பிரச்சனை உள்ளவர்களால் எந்த ஒரு கனமான பொருளையும் தூக்க முடியாது. ஏன் நீண்ட நேரம் நிற்கவோ, உட்காரவோ கூட முடியாது. சிலருக்கு முதுகு, இடுப்பு, கால் ஆகிய மூன்று பகுதிகளிலும் ஒரே நேரத்தில் கடுமையான வலி இருக்கும். இந்த வகையான முதுகு வலி இடுப்புமூட்டுக்குரிய நரம்புகளில் உள்ள பிரச்சனையால் வருவதாகும்.

இப்படி வரும் முதுகு அல்லது இடுப்பு வலியை ஒரு இயற்கை பானத்தைக் குடிப்பதன் மூலம் சரிசெய்ய முடியும். இங்கு முதுகு அல்லது இடுப்பு வலியைப் போக்கும் அற்புத பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்: பால் - 200 மிலி பூண்டு - 4 பற்கள்

தயாரிக்கும் முறை: முதலில் பாத்திரத்தில் பாலை ஊற்றி சூடேற்ற வேண்டும். பின் அதில் பூண்டு பற்களைத் தட்டிப் போட்டு, மிதமான தீயில் சில நிமிடங்கள் வேக வைத்து இறக்க வேண்டும்.

குடிக்கும் முறை: இந்த பாலை தினமும் குடிக்க வேண்டும். இப்படி குடிப்பதால், இடுப்பு அல்லது முதுகு வலி சற்று குறைந்திருப்பதை உணர்வீர்கள். வலி முழுமையாக போய்விட்டால், இந்த பாலைக் குடிப்பதை நிறுத்திக் கொள்ளலாம்.

பூண்டின் நன்மைகள் இந்த பானம் இடுப்புமூட்டுக்குரிய நரம்புகளில் உள்ள வலி மற்றும் காயங்களைக் கட்டுப்படுத்தும். மேலும் பூண்டில் நோயெதிர்ப்பு அழற்சி பண்புகள் உள்ளது. விருப்பமுள்ளவர்கள், இந்த பானத்துடன் சிறிது தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம்

குறிப்பு இந்த பானத்தை குடிப்பதோடு, இடுப்புமூட்டுக்குரிய நரம்பு வலியைக் குறைக்க உதவும் உடற்பயிற்சியையும் செய்து வந்தால், இன்னும் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.