சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதி எம்.எல்.ஏ.,வும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சருமான பழனிச்சாமியை சசிகலா முதல்வராக்கினார்.
தமிழகம் முழுவதும் சசிகலாவிற்கு எதிர்ப்பு இருந்து வரும் நிலையில், அவர் கைகாட்டிய எடப்பாடி பழனிச்சாமிக்கு அவரது சொந்த மாவட்டத்திலே கடும் எதிர்ப்பு இருந்து வந்தது.
தொகுதி எம்.எல்.ஏ.,க்களை தவிர கட்சி நிர்வாகி உட்பட அடிமட்ட தொண்டர்கள் அனைவரும் சசிகலா மற்றும் எடப்பாடிக்கு எதிரான நிலைப்பாடு எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ வெங்கடாச்சலம் அலுவலகம் முன்பு ஒன்று சேர்ந்த அ.தி.மு.க.வினர். எம்.எல்.ஏ.,வெங்கடாச்சலம், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சசிகலாவிற்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
முதல்வர் பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு சொந்த மாவட்டத்திலே எதிர்ப்பு கிளம்பியுள்ளது, சசிகலா குடும்பத்தை அதிர்ச்சியடைய செய்துள்ளது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.