Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 20, 2017

இனி பேஸ் புக்கில் நீங்கள் வேலை தேடலாம்! பயோ டேட்டாவை அப்லோட் செய்தால் வேலை தேடி வரும்!


உலகம் முழுவதும் பல கோடி இளைஞர்கள் பேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர். இதனாலேயே பலர் வேலைக்கு கூட செல்வதில்லை என கூறலாம்.

பலர் வேலைகளுக்கு நடுவே பேஸ் புக்கை பயன்படுத்துகின்றனர். அடிக்கடி பேஸ் புக்கை பயன்படுத்தி சிலர் வேலை இழந்துள்ளனர். எப்படியும் பலரின் வேலைக்கு ஆப்பு வைத்த பேஸ்புக் இனி இளைஞர்களுக்கு வேலை தர முடிவு செய்துள்ளது.

பேஸ் நிறுவனத்தில் அல்ல. பேஸ் புக்கில் கணக்கு வைத்திருக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை பிடிக்க பேஸ்புக்கை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

இதே போல் இளைஞர்களும் தங்களது பயோ டேட்டாவை பேஸ்புக் மூலம் நிறுவனங்களுக்கு அனுப்பலாம்.

இதற்கான புதிய ஆப்சன் விரைவில் அறிமுகமாக உள்ளது. அப்ளை நவ் என்ற பட்டன் விரைவில் அமைக்கப்பட உள்ளதாம்.

அதே போல் நியூஸ் பீட்டில் வேலைவாய்ப்பு குறித்த தகவல்கள் வந்துவிடும். இதுபற்றிய முழு விபரம் அறிமுகம் செய்யப்பட்ட பின்னரே தெரியவரும்.

இனி யாரும் உங்களை ” வேலை இல்லாமல் பேஸ்புக் பாத்துட்டு இருக்கியா”? என கேட்க முடியாது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.