Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 16, 2017

பொதுச் செயலாளராக சசிகலா நியமனத்தை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்தில் மைத்ரேயன் மனு


தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை மைத்ரேயன் எம்பி இன்று சந்தித்தார். அப்போது, சசிகலாவை அதிமுகவின் பொதுச் செயலாளராக நியமித்தது செல்லாது என அறிவிக்க கோரி மனு அளித்துள்ளனர்.


ஓபிஎஸ் ஆதரவு எம்பிக்கள் ராஜ்ய சபா எம்பி மைத்ரேயன் தலைமையின் டெல்லி சென்று தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளனர்.

ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ம் தேதி காலமானார். அதனைத் தொடர்ந்து அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். கட்சியின் உறுப்பினராக தொடர்ந்து 5 ஆண்டுகள் இல்லாத சசிகலாவை பொதுச் செயலாளராக நியமிக்க சட்டத்தில் இடம் இல்லை என்று சசிகலா புஷ்பா எதிர்ப்பு தெரிவித்தார்.

அதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு ஒன்றையும் சசிகலா புஷ்பா அளித்துள்ளார். இதனையடுத்து தேர்தல் ஆணையம் நோட்டீஸ் ஒன்றை சசிகலாவிற்கு அனுப்பி இருந்தது. இந்த

நோட்டீசுக்கு இதுவரை அதிமுகவில் இருந்து எந்த பதிலும் இல்லை.
இந்நிலையில், இன்று ஓபிஎஸ் அணியில் மைத்ரேயன் தலைமைத் தேர்தல் ஆணையரை சந்தித்தார். அவருடன் பி.எச். பாண்டியன், வழக்கறிஞர் ரவீந்தரனும் சென்றனர். அப்போது, அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை நியமித்தது செல்லாது என்று அறிவிக்கக் கோரி மனு அளித்துள்ளனர்.

மேலும், தண்டனை பெற்ற சசிகலாவை பொதுச் செயலாளராக அங்கீகரிக்கக் கூடாது என்றும் துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டதும் செல்லாது என்றும் அறிவிக்க வேண்டும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.