February 24, 2017
‘கண்ணீர் அஞ்சலி போஸ்டர்’’ அதிர்ச்சியில் மனைவிக்கு மாரடைப்பு! கருணாஸ் ஆவேசம்!
முக்குலத்தோர் புலிப்படை என்ற கட்சியை நடத்தி வரும் நடிகர் கருணாஸ், கடந்த சட்டமன்ற தேர்தலில் திருவாடானை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஜெ., மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஓபிஎஸ் அணி, சசிகலா அணி இரண்டாக பிரிந்தது. இந்நிலையில் நடிகர் கருணாஸ் சசிகலா அணிக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
தற்போது சசி ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் சசிக்கு ஆதரவாக ‘‘பணம் வாங்கிட்டு தானே ஓட்டு போட்டீர்கள், எல்லாம் எங்களுக்கு தெரியும், மூடிட்டு போங்க’’ என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இதனால் கருணாஸிற்கு தமிழக மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வலைத்தளங்களில் கருணாஸை கேலியாக சித்தரித்து, விமர்சனங்களும் செய்தனர் நெட்டிசன்கள்.
இதற்கிடைய பிப்.22 கருணாஸ் பிறந்த நாளன்று கருணாஸ் இறந்து விட்டதாக கூறி கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
அதை பார்த்து அவரது மனைவி கடும் வேதனை அடைந்ததாகவும், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அதற்கு உரிய சிகிச்சை பெற்றதாகவும் கருணாஸ் தெரிவித்து உள்ளார்.
இதனால் ஆவேசமடைந்த கருணாஸ், என்னை பற்றி அவதூறு தகவல்களை வெளியிட்டு வருபவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் கொடுத்திருப்பதாக கருணாஸ் கூறியுள்ளார்.
‘கண்ணீர் அஞ்சலி போஸ்டர்’’ அதிர்ச்சியில் மனைவிக்கு மாரடைப்பு! கருணாஸ் ஆவேசம்!
Reviewed by மறத்தமிழன்
on
February 24, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 24, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.