February 22, 2017
ஈஷா யோகா மையம் மீது சரமாரி குற்றச்சாட்டு- எதுக்கு வருகிறார் பிரதமர் – நீதிபதி ஹரிபரந்தாமன்
சென்னை, சேப்பாக்கத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில், கம்யூனிஸ்ட் தலைவர்கள் நல்லகண்ணு, ஜி.ராமகிருஷ்ணன், முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தச் சந்திப்பின்போது, ‘ஈஷா யோகா மையம் நடத்தும் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பங்கேற்கக் கூடாது’ என்று தெரிவித்தனர்.
வரும் 24-ம் தேதி சிவராத்திரி அன்று, ஈஷா யோகா மையம் சார்பில் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். ஈஷா யோகா மையம் விதிமுறைகளை மீறியுள்ளதால், இந்நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கக் கூடாது என்று மூவரும் கூறினர்.
அப்போது பேசிய முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன், ‘விதிகளை மீறி 13 லட்சம் சதுர அடியை ஆக்கிரமித்துதான் ஈஷா யோகா மையம் கட்டடங்களை நிறுவியுள்ளது. நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி, தொடர்ந்து கட்டடங்களைக் கட்டிவருகிறது ஈஷா. எனவே, வரும் 24-ம் தேதி நடக்கவுள்ள நிகழ்ச்சியில், பிரதமர் பங்கேற்கக் கூடாது’ என்று கேட்டுக்கொண்டார்.
நல்லகண்ணு கூறுகையில், ‘தொடர்ந்து பல ஆண்டுகளாக விதிமுறைகளை மீறி ஈஷா யோகா மையம் கட்டடங்களை எழுப்பியுள்ளது. அதனால்தான், ஈஷா யோக மையம் நடத்தவுள்ள நிகழ்வை எதிர்க்கிறோம். பிரதமர் வருவதால் எதிர்க்கவில்லை. இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால் மட்டுமே இந்த நிகழ்ச்சியை எதிர்க்கிறோம்’ என்று தெரிவித்தார்.
ஈஷா யோகா மையம் மீது சரமாரி குற்றச்சாட்டு- எதுக்கு வருகிறார் பிரதமர் – நீதிபதி ஹரிபரந்தாமன்
Reviewed by Admin
on
February 22, 2017
Rating: 5
Reviewed by Admin
on
February 22, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.