Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 15, 2017

அம்முவுக்கு எப்பவோ எம்.ஜி.ஆர். கொடுத்த மெஸேஜ்,இப்ப பொருந்துது, கேட்டுத்தான் பாருங்களேன்!


அதிமுக அமைந்த போது எம்.ஜி.ஆர் அவர்கள் எந்த நோக்கத்திற்காக இந்த கட்சி அமைகிறது என்று பேசியுள்ள மிக அரிதான ஆடியோ. எம்.ஜி.ஆர் அவர்களின் வழிகாட்டுதலின் படியே ஜெயலலிதா நடந்திருந்தால், இந்நேரம் அவர் புகழ் எங்கோ சென்று இருக்கும்.

நேற்று கொடுக்கப்பட்ட சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கும் தான். அவர் உயிரோடு இல்லை என்ற காரணத்தினால், அவருக்கு வழங்கப்பட்ட 4 வருட சிறை தண்டனை மட்டும் கிடையாது. மற்றபடி, 100 கோடி அபராதம் உண்டு.

அரசு அலுவலகங்களில் அவரின் படம் வைக்கப்படமாட்டாது என்பது அதை விட பெரிய தண்டனை. நல்ல வேளை, அவர் உயிரோடு இல்லை. அம்மா தாங்கியிருந்தே இருக்க மாட்டார் என்று சொல்லுகிறார்கள்.

அதிமுகவின் கொள்கைகளுக்கு மாறுபட்டு கூடா நட்பில் விழுந்து கேடாய் போன,அம்மா புரட்சித்தலைவர் கொள்கை நெறிகளை கேட்டு இருக்கலாமே, என்று ஆதங்கப்படுகிறார்கள் அவரின் விசுவாசிகள்.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.