Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 1, 2017

பீட்டாவால் மிரட்டப்படும் நடிகைகள், தப்புவது எப்படி? வக்கீல்களிடம் ஆலோசனை


பீட்டா ஒப்பந்தத்திலிருந்து தப்புவது எப்படி? வக்கீல்களிடம் ஆலோசிக்கும் டாப் நடிகைகள்!

இனிமேல் தமிழ்நாட்டுக்குள் பீட்டாவுக்கு ஆதரவாக யாராவது பேசினால் அவர்கள் கதி அதோ கதிதான் என்ற அளவுக்கு ஆகிவிட்டது. ஆனாலும் இன்னும் சில நடிகைகள் அந்த அமைப்பில் நீடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

குறிப்பாக எமி ஜாக்ஸன், தமன்னா, த்ரிஷா ஆகியோர் இன்னமும் பீட்டா உறுப்பினர்களாக நீடிக்கிறார்களாம். இவர்கள் தவிர இன்னும் சில நடிகைகள் பீட்டாவில் இருக்கிறார்களாம். இவர்கள் நடிக்கும் படங்கள் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்படலாம் என்பதால் அந்தந்த படங்களின் தயாரிப்பாளர், இயக்குநர்கள் அவர்களை பீட்டாவுக்கு எதிராக வாய்ஸ் தருமாறு கண்டிப்பாகக் கூறிவிட்டார்களாம்.

ஆனால் பீட்டாவோ எங்களுக்கு எதிராக ஸ்டேட்மெண்ட் விட்டால் உறுப்பினர்கள் பெயர்களை பகிரங்கமாக வெளியிடுவோம் என்று மிரட்டுகிறது.
இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கிறார்கள். பீட்டாவுடனான ஒப்பந்தத்தை எப்படி ரத்து செய்யலாம் என்று வழக்கறிஞர்களிடம் ஆலோசனை நடத்துகிறார்களாம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.