Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 1, 2017

போலீசுக்கே போன் மூலம் டார்ச்சர்.... அசராமல் 800 முறைக்கும் மேல் போன் செய்த தில்லாலங்கடிகள்


கோவை மாநகர காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு 800 முறைக்கு மேல் போன் செய்து ஆபாசமாகப் பேசியவர்களை போலீஸார் கைது செய்தனர்.

கோவை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தினமும் இருவர் போன் செய்து கெட்ட வார்த்தைகளில் பேசி, போலீஸையே துன்புறுத்தியுள்ளனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவை மாநகர கட்டுப்பாட்டு அறைக்கு இரண்டு பேர் கடந்த ஒன்றரை மாதங்களாக வெவ்வேறு போன் நம்பர்களில் இருந்து பேசியுள்ளனர். அவர்கள் ஆண் போலீசார் போன் எடுத்தாலும் கெட்ட வார்த்தைகளிலும், பெண் போலீஸார்ப் போன் எடுத்தால், ஆபாச வார்த்தைகளிலும் பேசியுள்ளனர்.


பாதிக்கப்பட்ட போலீசார், மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் மற்றும் துணை கமிஷனர் லத்சுமி ஆகியோரிடம் புகார் அளித்தனர். கமிஷனர் அமல்ராஜ், இந்தப் புகாரை விசாரிக்கும்படி சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதனையடுத்து, இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு அந்த இருவரையும் கைது செய்தனர்.

ஒருவர் வேடப்பட்டியைச் சேர்ந்த லேத் வேலை செய்யும் தொழிலாளி ஶ்ரீகாந்த். மற்றொருவர் ஒத்தக்கால் மணடபத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி செல்வராஜ் என தெரியவந்தது.
இதில் ஶ்ரீகாந்த் 10 சிம்கார்டுகளிலிருந்து 650 முறையும், செல்வராஜ் அதேபோல் 10 சிம்கார்டுகளை மாற்றி 842 முறையும் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து பேசியுள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.