Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 9, 2017

7வயது சிறுமி பலாத்காரம் செய்து எரித்து கொலை - கொலையாளியை தூக்கில் போடக்கோரி மறியல்


சென்னையில் 7 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த காமுகனுக்கு தூக்கு தண்டனை வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போரூர் அருகே அடுக்குமாடு குடியிருப்பில் வசிக்கும் பாபு-ஸ்ரீதேவி தம்பதியின் மகள் ஹாசினி. கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த மாயமானார். சிறுமி காணாமல் போனது பற்றி விசாரணை நடத்திய காவல்துறையினருக்கு சிசிடிவி ஆதாரம் சிக்கியது.

அதை வைத்து கொலையாளியை போலீசார் மடக்கினர்.அதே குடியிருப்பில் வசித்துவரும் மென்பொருள் பொறியாளர் தஷ்விந்த் சிறுமி ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்ததுடன் பெட்ரோல் ஊற்றி படுகொலை செய்துள்ளார்.


இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் கொலை, பலாத்காரம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். 7 வயது இளம் பிஞ்சை பலாத்காரம் செய்ததோடு எரித்து கொன்ற காமுகனுக்கு தூக்கு தண்டனை வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போரூர் அடுத்த மாதா நகரில் திரண்ட அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கொலையாளி தஷ்விந்துக்கு ஜாமின் வழங்கக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்தனர். அவருக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் ஆஜராக கூடாது என தெரிவித்த அப்பெண்கள் கொலையாளிக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என ஆவேசமாக குரல் எழுப்பினர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.