February 14, 2017
ஆளுநரை இன்று மாலை 5.30 மணிக்கு சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் எடப்பாடி பழனிச்சாமி
ஆளுநர் வித்யாசாகர் ராவை எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 5.30 மணிக்கு நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார்.
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று மாலை 5.30 மணிக்கு நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.
முதல்வர் பதவியில் இருந்து தாம் கட்டாயப்படுத்தப்பட்டு ராஜினாமா செய்ய வைக்கப்பட்டேன் என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்து வருகிறார். அத்துடன் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தமக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என ஆளுநரிடம் முதல்வர் ஓபிஎஸ் கோரிக்கை விடுத்திருந்தார்.
சசிகலாவோ தமக்கே அதிமுக ஆதரவு எம்.எல்.ஏக்கள் இருக்கிறது; என்னை முதல்வராக்குங்கள் என ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு நிலுவையில் இருந்ததால் சசிகலாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த சசிகலா ஆளுநரை மிரட்டும் வகையிலும் வன்முறையை தூண்டும் வகையிலும் பேசிவந்தார்.
தகர்ந்த கனவு
இதனிடையே சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் இன்று உறுதி செய்தது. இதனால் அவரது முதல்வர் பதவி கனவு தகர்ந்தது.
எடப்பாடி தேர்வு- ஓபிஎஸ் நீக்கம்
இதையடுத்து அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி, சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதேநேரத்தில் முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை அதிமுகவில் இருந்து நீக்குவதாக சசிகலா அறிவித்தார்.
ஆளுநருக்கு தகவல்
தாம் அதிமுக சட்டசபை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தகவலை ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு ஃபேக்ஸ் மூலம் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார். தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டால் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பட்டியலை தரவும் தயார் எனவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார்.
இன்று சந்திப்பு
இதை ஏற்று இன்று மாலை 5.30 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த சந்திப்பின் போது தமக்கான ஆதரவு எம்.எல்.ஏக்கள் பட்டியலை கொடுத்து முறைப்படி ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. இதனைத் தொடர்ந்து ஆளுநர் தம்முடைய முடிவை தெரிவிப்பார்.
ஆளுநரை இன்று மாலை 5.30 மணிக்கு சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் எடப்பாடி பழனிச்சாமி
Reviewed by மறத்தமிழன்
on
February 14, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 14, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.