February 5, 2017
ஆதார் சேவைகளை வழங்கிய 50 மோசடி இணையதளங்கள் முடக்கம்.
ஆதார் சேவைகளை தொடர்பான சட்டவிரோதமாக வழங்கி வந்த 12 மோசடி இணையதளங்கள் மற்றும் 12 மொபைல் செயலிகள் முடக்கப்பட்டன.
ஆதார் அடையாள அட்டைகளை இந்திய சிறப்பு அடையாள ஆணையம் வழங்கி வருகிறது. சில இணையதளங்கள், மொபைல் செயலிகள் மூலம் ஆதார் சேவைகள் சட்டவிரோதமான முறையில் வழங்கப்பட்டு வருவதாக இந்த ஆணையத்துக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் மோசடியாக இயங்கி வந்த 12 இணையதளங்கள் மற்றும் 12 மொபைல் செயலிகள் முடக்கப்பட்டன. இதேபோல் மோசடியில் ஈடுபட்டு வரும் மேலும் 26 இணையதளங்கள் மற்றும் மொபைல் செயலி களையும் முடக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி அஜய் பூஷண் பாண்டே கூறும்போது, ‘‘ஆதார் அட்டை வழங்கும் சேவையை செய்வதாக கூறி குடிமக்களின் அடிப்படை தகவல்களை திருடும் வகையில் சில இணையதளங்கள் மற்றும் மொபைல் செயலிகள் இயங்கி வருவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்த இணையதளங்கள் மற்றும் மொபைல் செயலிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
www.uidai.gov.in என்ற முகவரிதான் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரபூர்வ இணையதளம் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த இணையதள முகவரியில் சென்று பொது மக்கள் தங்களுக்கு தேவை யான ஆதார் தகவல்கள், சேவைகளை பெற்றுக் கொள்ளும்படியும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பொது சேவை மையங்களை அணுகும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆதார் சேவைகளை வழங்கிய 50 மோசடி இணையதளங்கள் முடக்கம்.
Reviewed by மறத்தமிழன்
on
February 05, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 05, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.