February 9, 2017
சசிகலாவுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்காதீர்கள்.. ஓ.பி.எஸ். வைத்த 4 கோரிக்கைகள்
சசிகலாவுக்கு முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைக்கக் கூடாது என்று ஆளுநரிடம் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை வைத்துள்ளார்.
சசிகலா தேர்வு சட்டவிரோதமானது, அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கக் கூடாது என்று தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர ராவிடம் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை வைத்துள்ளார்.
ஆளுநர் வித்யாசாகர ராவை இன்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ராஜ்பவனில் சென்று சந்தித்தார். அப்போது அவரிடம் சில கோரிக்கைகளை வைத்து விட்டு வந்துள்ளார்.
அவர் முன்வைத்துள்ள கோரிக்கைகளாக கூறப்படுவது:
என்னைக் கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் வாங்கி விட்டனர்.
சசிகலாவை முதல்வராக தேர்வு செய்தது சட்டவிரோதம்.
சசிகலாவுக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கக் கூடாது.
ஆளுநர் மாளிகையில் எம்.எல்.ஏக்கள் அணிவகுப்பை நடத்தக் கூடாது.
சட்டசபையில் மட்டுமே பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க அனுமதிக்க வேண்டும்.
அதிமுக சட்டசபை உறுப்பினர்களை சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளனர்.
இவ்வாறு முதல்வர் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
சசிகலாவுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்காதீர்கள்.. ஓ.பி.எஸ். வைத்த 4 கோரிக்கைகள்
Reviewed by மறத்தமிழன்
on
February 09, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 09, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.