Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 15, 2017

கூவத்தூர் ரிசார்ட்டுக்குள் புகுந்த அதிரடிப்படை.. 3 மணி வரை எம்.எல்.ஏக்களுக்குக் கெடு!


கூவத்தூர் ரிசார்ட்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏக்கள் 3 மணிக்குள் வெளியேற போலீஸார் இறுதிக் கெடு விதித்துள்ளனர்.

கூவத்தூர் ரிசார்ட்டில் எம்எல்ஏக்கள் கடத்தி வைக்கப்பட்டுள்ளதாக மதுரை தெற்குத் தொகுதி எம்எல்ஏ சரவணன் புகார் அளித்தைத் தொடர்ந்து அங்கு போலீஸார் விரைந்துள்ளனர். அதிரடிப்படையினர் அதிரடியாக உள்ளே நுழைந்துள்ளனர். எம்.எல்.ஏக்கள் 3 மணிக்குள் வெளியேற கெடு விதிக்கப்பட்டுள்ளது.

அதிமுக எம்எல்ஏக்கள் 8வது நாளாக கூவத்தூர் ரிசார்ட்டில் கடத்தி அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து மாறுவேடத்தில் தப்பி வந்த எம்எல்ஏ சரவணன் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்தனர். கூவத்தூர் ரிசார்ட்டில் விசாரணை நடத்திய போலீசாருடன் எம்.எல்.ஏ.க்கள் வாக்குவாதம் செய்தனர்.

மேலும் எம்.எல்.ஏ.க்கள் கடத்தல் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். எடப்பாடி பழனிச்சாமியை போலீஸ் கைது செய்யலாம் என்பதால் கூவத்தூரில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அதிரப்படையினரும் உள்ளே நுழைந்துள்ளதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. கூவத்தூர் ரிசார்ட்டை சுற்றிலும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கூவத்தூர் ரிசார்ட்டுக்குள் அதிமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.