Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 22, 2017

‘‘மார்ச் 1 முதல் கோக், பெப்சி தடை’’ வணிகர் சங்கம் அதிரடி! ஜல்லிக்கட்டு புரட்சி எதிரொலி!


வரும் 1ம் தேதி முதல் கடைகளில் கோக் மற்றும் பெப்சி விற்பனை கிடையாது. கடைகாரர்கள் விற்க மாட்டார்கள் என்று வணிகர் சங்கத் தலைவர் விக்ரமராஜா கோரியுள்ளார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தை மாணவர்கள் புரட்சிகரமாக நடத்திய போது, கோக் மற்றும் பெப்சி உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்களை அருந்துவதில்லை என்று முடிவு செய்து அறிவித்தனர்.
இதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் மார்ச் 1ம் தேதியில் இருந்து பெப்சி, கோக் போன்ற வெளிநாட்டு குளிர்பானங்களை விற்பதில்லை என்று விக்ரமராஜா அறிவித்தார்.
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தையொட்டி எடுக்கப்பட்ட பெப்சி, கோக் குளிர்பானங்களை விற்பதில்லை என்ற முடிவு மாணவர்களுக்கு கிடைத்த வெற்றி.
எனவே, விஷத்தன்மை கொண்ட இந்த குளிர்பானங்களை பொதுமக்கள் வாங்குவதில்லை என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். நஷ்டமானால் பரவாயில்லை பெப்சி, கோக் குளிர்பான விற்பனையை நிறுத்திவிட்டால் வியாபாரிகளுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும். இருந்தாலும் பரவாயில்லை.
தமிழக மக்களுக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த விற்பனையை நிறுத்த உள்ளோம். தற்போது உள்நாட்டு குளிர்பானம் தயாரிக்க பல நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
அதே வேளையில் தமிழ் நாட்டில் உள்ள அனைத்துக் கடைகளிலும் பதநீர் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இனி, வெளிநாட்டு குளிர்பானங்களை தவிர்த்து இயற்கையான பதநீரை அருந்த மக்கள் முன் வர வேண்டும்.
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது பெப்சி, கோக்கை கையில் தொட மாட்டோம் என்று இளைஞர்கள், மாணவர்கள், மாணவிகள், அறிவித்த பின்னர், வணிகர் சங்கம் மார்ச் 1ம் தேதியில் இருந்து வெளிநாட்டு குளிர்பானங்களை விற்பதில்லை என்று அறிவித்தது.
இதனால் 70 சதவீதம் வெளிநாட்டு குளிர்பான விற்பனை குறைந்துள்ளது என்று விக்ரமராஜா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.