அந்தப் பெண் பவானி.(பெயர்கள் ஊர்கள் மாற்றப் பட்டுள்ளது) செவல்புதூர் ஊரைச் சேர்ந்த அப்பாவிப் பெண். கல்யாணம் ஆகி மூன்று வருடங்கள் ஆகிறது.
கணவன் ஒரு விபத்தில் அடிபட்டு பாளை ஐ கிரவுண்ட் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி இருந்தான். தினமும் தனது கிராமத்தில் இருந்து சாப்பாடு கொண்டு வந்து கொடுத்து விட்டு இரவு கடைசி பஸ்க்கு ஊர் போவாள்.
கணவனின் அம்மா ஆஸ்பத்திரியில் தங்கி மகனைப் பார்த்துக் கொண்டார். அன்றும் அப்படி இரவு பத்து மணிக்கு மேல் கிளம்பினாள் பவானி. நல்ல மழை பெய்து கொண்டிருந்தது.
கடைசி பஸ்ஸை பிடிக்க வேண்டும். வேகமாக நடந்தால் மழை வேகமாக அடிக்க ஒரு பூட்டி இருந்த கடை முன் ஒதுங்கினாள். மழை விடுவது போல இல்லை.
பயம் பிடித்துக் கொண்டது. நனைந்தாலும் பரவாயில்லை என்று சொட்ட சொட்ட நடந்தாள். பின்னால் ஒரு போலீஸ் வேன் வந்து நின்றது.
சர்க்கென்று பிரேக் போட திடுக்கிட்டு திரும்பினாள், பவானி. ஒரு போலீஸ் அதிகாரி மிரட்டும் தோரணையில் என்ன எங்கே போய்ட்டு வர்றே என்க? பயந்து நடுங்கி வார்த்தைகள் வரவில்லை. நடுங்கினாள் பவானி. வண்டில ஏறு என்றார் அதிகாரி.
கதறி அழத் தொடங்கினாள் பவானி. கையெடுத்துக் கும்பிட்டாள். கணவன் உடல்நிலை பற்றி கூறினாள். வண்டில ஏறு என்று மிரட்டி வேனில் ஏற்றிக் கொண்டு தனது போலீஸ் குவாட்டரஸ் போனார் அதிகாரி. வழி எங்கும் பயத்தில் கதறினாள் பவானி.
வீட்டுக்குள் அழைத்து சென்றார். யாரும் இல்லை. மேலும் பயந்து அழுதாள் பவானி. மிரட்டி டவல் கொடுத்து துவட்டிக்கோ என்றார் அதிகாரி. காபி போட்டுக் கொடுத்தார்.
கட்டிலில் உட்காரச் சொல்லி மிரட்டினார். அவளின் கம்பீரமான அழகு அதிகாரியை மயக்கியது. எப்படி ஒரு பேரழகி.. என்று யோசித்த படி
“இங்க பாரு உன்னை சந்தேகக் கேசுல உள்ளபோட்டு முட்டிய பேத்துடுவேன். நான் சொல்றபடி கேளு. காலைல போயிடலாம். என்ன சொல்றே” என்றபடி பவானியின் புடவையை இழுக்க ,
அப்போது தான் பவானி பேசினாள். ஐயா எனக்கு மூணு வருஷமா குழந்தை இல்லிங்க. எம்புருஷனுக்கு அடி பட்டிருச்சுங்க. நான் இப்போ அஞ்சு மாசம் முளுவாம இருக்கேங்கய்யா..
இப்போ நீங்க ஏதாவது பண்ணிடீங்கன்ன்னா கரு கலைஞ்சிடும்யா. என்ன விட்ருங்கையா. எனக்கு நல்ல படியா கொழந்தை பொறக்கட்டும்.
எம் புள்ள மேல சத்தியமா ஒரு நா உங்க வீட்டுக்கு வந்து முந்தானை விரிக்கிரிறேன்யா என்று குலுங்கி அழுதபடி, என் வயித்துல இருக்குற புள்ள வேனுங்கய்யா என்று அதிகாரி காலில் விழுந்து கதறினாள் பவானி.
ஆடிப் போய் விட்டார் அதிகாரி. சத்தியமா ஒரு நாள் நான் வருவேங்கைய்யா என்று கதற …அதிகாரி கண் கலங்கி விட்டார்.
“எந்திரி அப்படி தூங்கு காலைல வீட்டுக்குப் போ” என்றார் பவானிக்கு ஆச்சரியம். நம்ப முடியாமல் ஒரு ஓரமாக குறுகிப் படுத்துக்கொண்டாள் காலையில் காபி போட்டு எழுப்பினார் அதிகாரி. குடித்தாள் கையெடுத்து வணங்கினாள். கிளம்பி விட்டாள்.
ஏழு வருடங்கள் ஓடியது ஒரு பத்திரிக்கைக்கு பேட்டி அளித்தார் அந்த அதிகாரி. அந்த பொண்ணு சொன்ன மாதிரியே குழந்தை பெற்றுக் கொண்டு என்னை தேடி வந்தாள்.
கையில் குழந்தை கூடவே கணவனும் வந்தான். குழந்தையை என் காலடியில் போட்டார்கள். ஆடிப்போய் விட்டேன் என்னையே பெயரும் வைக்கச் சொன்னார்கள்.
அப்போது எம்ஜிஆர் ஆட்சி. நான் அந்த ஆண் குழந்தைக்கு ராமச்சந்திரன் என்று பெயர் வைத்தேன்.
அதை விட ஆச்சரியம் அந்தக் கணவன் என்னிடம் “சாமி நீங்க காட்டின கருணை தான் இப்போ எனக்கு புள்ளை இருக்கு. எம் பொஞ்சாதி சொன்ன மாதிரியே நாங்க நடந்துக்கணும். எப்போனு சொல்லுங்க சாமி. பவானிய அனுப்பி வைக்கிறேன், என்றான் அந்த அப்பாவிக் கணவன்.
செருப்பால் அடித்த மாதிரி இருந்தது. அவர்களை வாழ்த்து கூறி அனுப்பி வைத்தேன். நாம் வாழ்கையில் ஏதாவது ஒரு தருணத்தில் மனிதனாக நடந்து கொண்டால் நமக்கு இறைவன் உதவுவான் என்பதை ஒரு அப்பாவிப் பெண்ணிடம் கற்றுக் கொண்டேன்.
மறக்க முடியாத அப்பாவிக் குடும்பம் என்று கண்கள் கலங்கினார், அந்த ஒய்வு பெற்ற போலீஸ் அதிகாரி.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.