February 3, 2017
அண்ணா நினைவிடத்தில் 144 தடையை மீறி சசி, ஓபிஎஸ் அஞ்சலி - ஜெ., நினைவிடத்தில் மண்டியிட்டு வணங்கினார்!
மெரீனா கடற்கரையில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, முதல்வர் ஒபிஎஸ் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான அதிமுகவினர் அண்ணா நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய சசிகலா, ஒ.பன்னீர் செல்வம், தம்பித்துரை உள்ளிட்ட அதிமுகவினர் ஜெயலலிதா நினைவிடம், எம்.ஜி.ஆர் நினைவிடத்திலும் இன்று அஞ்சலி செலுத்தினர்.
அண்ணாவின் 48வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, முதல்வர் ஒபிஎஸ் கட்சி நிர்வாகிகள், மத்திய, மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் புடைசூழ வந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் சுற்றி வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது மண்டியிட்டு குனிந்து விழுந்து கும்பிட்டார். இதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்கும் சென்று அஞ்சலி செலுத்தினார் சசிகலா.
மெரீனா கடற்கரைக்கு கூட்டமாக செல்லவும், பேரணி செல்லவும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக, அதிமுக நிர்வாகிகள் கூட்டமாக சென்று நினைவிடங்களில் அஞ்சலி செலுத்திவிட்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணா நினைவிடத்தில் 144 தடையை மீறி சசி, ஓபிஎஸ் அஞ்சலி - ஜெ., நினைவிடத்தில் மண்டியிட்டு வணங்கினார்!
Reviewed by மறத்தமிழன்
on
February 03, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 03, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.