Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 8, 2017

சசி தலைமையில் எம்.எல்.ஏக்கள் கூட்டம்- அதிமுக எம்.எல்.ஏக்கள் 131, கூட்டணி 3 பேர் பங்கேற்பு


அதிமுக தலைமை அலுவலத்தில் நடைபெற்று வரும் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் மொத்தம் எத்தனை பேர் பங்கேற்பார்கள் என்ற கேள்வி எழுந்த நிலையில் சசிகலாவிற்கு ஆதரவாக 131 பேர் பங்கேற்றுள்ளதாக அதிமுக வட்டார தகவல்கள்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்களின் அவசரக் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. சசிகலா தலைமையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் 130 பேர் பங்கேற்றுள்ளதாக அக்கட்சியின் நிர்வாகியும் எம்.எல்.ஏவுமாக செங்கோட்டையன் கூறியுள்ளார்.

சசிகலாவிற்கு எதிராக முதல்வர் ஓபிஎஸ் எழுப்பிய கலகக் குரலால் தமிழக அரசியல் களத்தில் அனல் பறக்கிறது. சசிகலாவிற்கு ஆதரவாக எத்தனை எம்.எல்.ஏக்கள் உள்ளனர் என்பதை அறிவதற்காக அவசர எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் பங்கேற்க சற்று முன்பு போயஸ் தோட்டத்தில் இருந்து ராயப்பேட்டை அலுவலகத்திற்கு வந்தார் சசிகலா. வழக்கமாக இரு விரல் காட்டி கையசைத்து விட்டு கூட்டத்திற்கு சென்றார்.

கடந்த மூன்று தினங்களுக்கு முன்புதான் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. சசிகலாவின் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார் ஓ.பன்னீர் செல்வம். இரு தினங்களில் சசிகலாவும், ஒ.பன்னீர் செல்வமும் எதிர் எதிர் துருவங்களாக உள்ளனர்.
ஓ.பன்னீர் செல்வத்தின் பின்னர் தற்போதுவரை 3 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஓ.பன்னீர் செல்வம் மற்றும் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தவிர அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் 131 பேர் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு எம்.எல்.ஏக்களும் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் 100 பேர் மட்டுமே பங்கேற்றதாக ஊடகங்களில் தகவல் வெளியானது. இப்போது அதிமுக எம்.எல்.ஏக்கள் 131 பேர் கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் 3 பேர் என 134 பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.