Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 21, 2017

போயஸ் இல்லத்தில் : 100 பேருக்கு கொடுக்கப்பட்ட அசையா சொத்துகள் : 3 தலைமுறைக்கு போதும்


எடப்பாடி பதவி ஏற்ற அன்று இரவு போயஸ் இல்லத்தில் அனைத்து உறுப்பினர்களுக்கும் பிரமாண்ட விருந்து கொடுக்கப்பட்டது.
இரவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ரகசிய கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு பெரிய கவனிப்பும் நடந்துள்ளது.
எடப்பாடி பழனிசாமியும், டி.டி.வி.தினகரனும் தெரிவித்த அறிவிப்பு எம்.எல்.ஏ.க்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.க்களிடம், “கட்சிக்கு துரோகம் செய்து விட்டு எதிரி பன்னீர்செல்வத்தை அம்மாவின் ஆசியாலும் சின்னம்மாவின் வழிகாட்டுதலாலும் வீழ்த்தி விட்டோம்.
இதற்கெல்லாம் நம்முடைய ஒற்றுமையே காரணம். இந்த சந்தோஷம் நீடிக்க  நீங்கள் நம்பிக்கை வாக்கெடுப்பிலும் விசுவாசத்தை காட்டி விட்டீர்கள். இனி நம்மை யாராலும் அசைக்க முடியாது” என்று டி.டி.வி. தினகரன் பேசியுள்ளார்.
அடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “முதல்வராக என்னை தேர்வு செய்த சின்னம்மாவுக்கு காலம் முழுவதும் என் விசுவாசத்தை காட்டுவேன். இந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள அவர் இங்கு இல்லை.
சிலரது சூழ்ச்சியால் அவர் சிறைவாசத்தை அனுபவித்து வருகிறார். பல சோதனைகளை கடந்து விட்டோம். உங்கள் விருப்பங்கள், ஆசைகளை நிறைவேற்றுவோம். எம்.எல்.ஏ.க்களின் பலம், பலவீனத்தை தெரிந்துக் கொண்டு செயல்பட வேண்டும்.
சின்னம்மாவின் வழிகாட்டுதல்படி செயல்பட்டால் நிச்சயம் வெற்றி பெறுவோம். ஏற்கெனவே நம் அணியில் உள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டோம்.
மெஜாரிட்டி நிரூபிக்கப்பட்டப்பிறகு ஆதரவளித்த எம்.எல்.ஏ.க்களுக்கு நாம் கொடுக்கப் போகும் பரிசு அவர்கள் அனைவரையும் ஆச்சர்யப்படுத்த வேண்டும் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் டி.டி.வி. தினகரன் கலந்து ஆலோசித்துள்ளார்.
என்ன பரிசு என்று சொல்லும் போது, தற்போதைய சூழ்நிலையில் பணமாக கொடுக்க வழியில்லை. இதனால் சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது.
அது அசையா சொத்தாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்த தினகரன் மலையை கை காட்டியுள்ளார். குளுகுளு மலையில் அசையா சொத்துக்கள்.
இந்த தகவல் வெளியானதும் சசிகலா அணியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் மகிழ்ச்சியில் திளைத்து போயஸ் கார்டனே அதிரும் படியாக ஆரவாரம் செய்துள்ளனர்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.