வரும் அக்டோபரில் பூமி முழுமையாக அழியும் என்று விஞ்ஞான எழுத்தாளர் ஒருவரின் கருத்து கிலியை கிளப்பியுள்ளது.
‘பிளாணட் எக்ஸ்- தி 2017 அரைவல்’ என்ற பெயரில் டேவிட் மேட் எனும் எழுத்தாளர் எழுதியுள்ள புத்தகத்தில் சூரியனைப் போன்றதொரு கோள் பூமியை நோக்கி பயணித்து வருகிறது. நிபிரு என்று அழைக்கப்படும் அந்த நெருப்புக் கோள் பூமியின் தென்துருவம் மீது வரும் அக்டோபரில் மோதும். இதனால் பூமி முழுமையாக அழியும் என்று எழுதியுள்ளார்.
சூரிய குடும்பத்தின் விளிம்புப் பகுதியில் இருப்பதாக நம்பப்படும் நிபிரு கோளின் இருப்பை சில விஞ்ஞானிகள் கேள்வி எழுப்ப, அப்படி ஒரு கோள் இருப்பதாக டேவிட் மேட் போன்ற கான்ஸ்பிரசி அறிவியலாளர்கள் சத்தியம் செய்கிறார்கள். பூமியை விட பலமடங்கு பெரிதாக உள்ள அந்தக் கோள் பூமியை நோக்கி பல ஆண்டுகளாக பயணித்து வருவதாகவும், வரும் அக்டோபரில் பூமியின் மீது அந்த கோள் மோதும் என்றும் கூறுகிறார் டேவிட். ஆனால், டேவிட்டின் இந்த கருத்தை நாசா முழுமையாக நிராகரித்துள்ளது. நிபிரு என்ற கோள் கற்பனையே என்கிறார்கள் நாசா விஞ்ஞானிகள். ஏற்கனவே 2012 மற்றும் 2015 செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களிலும் இதே போன்ற பீதியைக் கிளப்பினர். நல்ல வேளையாக அப்போதெல்லாம் பூமி உடைந்து சிதறாமல் பாதுகாப்பாகவே இருந்திருக்கிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.