Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 13, 2017

முடிவும், விடிவும்


எட்டுக் கோடி தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தங்கள் சல்லிக்கட்டு தீர்ப்பை உரிய நேரத்தில் அளிக்க முடியவில்லை உச்சஅநீதிமன்ற நீதிபாதிகளுக்கு...

சினிமா நடிகைகளை எல்லாம் சந்திக்க முடிந்தாலும், தமிழக எம்.பி.க்களை சந்திக்க முடியவில்லை உலகம் சுற்றும் பிரதமருக்கு...

தன்னைச் சுற்றி நடக்கும் கொள்ளைகளை, கொடூரங்களை கண்டும் காணாமல் இருந்தாலும், சல்லிக்கட்டு நடத்துபவர்களை கைது செய்யாமல் இருக்க முடியவில்லை சசிகலாவிடம் குனியும் முதல்வருக்கு...

"இருக்கிறவன் சரியாக இருந்தால் சிரைக்கிறவன் சரியாக சிரைப்பான்" என்று ஒரு பழமொழி உண்டு. நாம் சரியாக இல்லாததால் வந்த வினைகள் இவையெல்லாம். நம்மை மாற்றுவோம், தோழர்களே, நம் வாழ்வும், வருங்காலமும் தாமாக மாறும்!

விவசாயிகள் மரணம், மழையின்மை, நீரின்மை, வறட்சி, பஞ்சம், அடிமைப்படுத்தல், அவமதித்தல், அலங்கோல அரசியல், பொருளாதாரச் சீரழிவு, சாதிவெறி, ஆணவக் கொலைகள், வளத்திருட்டு, குடி நோய் என ஓர் ஆழ்ந்த இருட்டுக்குள் நம் இனம் கிடந்து உழன்றாலும்...

தமிழர் திருநாளாம் தைப் பொங்கல்
நமக்குள் நம்பிக்கையைப் பொங்கட்டும்!
பிறக்கவிருக்கும் தமிழ்ப் புத்தாண்டு
நம் பிரச்சினைகளுக்கு ஒரு முடிவைத் தரட்டும்!
நம் சந்ததிகளுக்கு ஒரு விடிவைத் தரட்டும்!!

அன்பார்ந்த வாழ்த்துக்களுடன்,

சுப. உதயகுமாரன்
நாகர்கோவில்,
சனவரி 13, 2017.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.