விவசாயிகளுக்காக சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கினார். மற்றொரு நடிகரான மன்கர்டுடன் இணைந்து கடந்த 2015-ம் ஆண்டு 'நாம் ' என்ற பெயரில் அறக்கட்டளை நிறுவி நிதி திரட்டத் தொடங்கினார். விவசாயிகளுக்கு நிதியைத் திரட்டுபவர் முதலில் தானே ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் அல்லவா?. அதனால் தான் சினிமாவில் சம்பாதித்த பணத்தின் பெரும்பகுதியையும் அந்த அறக்கட்டளைக்கு வழங்கினார். 'நாம்' அறக்கட்டளை வழியாக இதுவரை 30 கோடி ரூபாய்க்கு மேல் விவசாயிகளுக்கு உதவி செய்யப்பட்டுள்ளது.
நிதி திரட்டுவது மட்டுமல்ல நானா படேகரே களத்தில் இறங்கி, ஒவ்வொரு கிராமம் கிராமமாகச் சென்று தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் வீடுகளைத் தேடி நேரடியாக சென்று நிதியை வழங்கினார். இந்த ஆண்டு நானா படேகர் நடித்த 'நட்ஸாமரட் ' திரைப்படம் வெளியானது. அப்போது நானா படேகர் சொன்ன வார்த்தைகள் 'எனது படத்தைப் பார்ப்பதை விட ஒரு முறை மராத்வாடா வந்து விவசாயிகளின் நிலையை பாருங்களேன்' என்பது. எந்த ஒரு நடிகர் இப்படி சொல்வார்? பெரியதாக நடிகர்களைத் தலையில் தூக்கி வைத்து ஆடாத மகராஷ்டிரத்துக்கு மண்ணை நேசிக்கும், மக்களை நேசிக்கும் நடிகன் கிடைப்பதற்கு அந்த மக்கள் தவம் செய்திருக்க வேண்டும்தானே.
பார்வையாளர்களை நோக்கிப் பல பன்ச் டயலாக்குகளைப் பேசித்தள்ளும் பல புரட்சி நடிகர்களை உருவாக்கியது தமிழகம். ஏன் முதல்வர்கள் கூட சினிமாத்துறையில் இருந்துதான் தமிழகத்துக்கு கிடைத்திருக்கின்றனர். இன்னமும் கிடைப்பார்கள்.... ஆனால் ஒரு நானா படேகர்தான் இன்னும் கிடைக்கவில்லை!


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.