Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 10, 2017

”உண்ண உணவு இல்லை”


எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர் ஒருவர், தங்களுக்கு உண்ண உணவுகூட இல்லை என வேதனையுடன் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

இந்திய எல்லை பாதுகாப்பு படையின் 29ஆவது பட்டாலியனில் பணியாற்றி வரும் தேஜ் பகதூர் யாதவ் என்னும் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் தனது குமுறலை வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

அதில், ”அரசு என்னவோ எங்களுக்கு தேவையான உணவு பொருட்களை வாங்கி அனுப்புகிறது. ஆனால் எங்கள் உயர் அதிகாரிகள் அதை சட்ட விரோதமாக விற்று தங்கள் சட்டைப் பையில் போட்டுக்கொள்கிறார்கள். மேலும் ஒரு சில பொருட்களை கொண்டே சமையல் செய்ய அதிகாரிகள் உத்தரவிடுகிறார்கள். காலையில் எங்களுக்கு கிடைப்பது அரைகுறையாக சுட்ட சப்பாத்தியும், டீயும்தான். மதிய நேரங்களில் தரம் குறைவான பருப்பு மட்டுமே, இதனால் ஜவான்கள் போதிய ஊட்டச்சத்து இல்லாமல் இருக்கிறார்கள். சில நேரங்களில் வெறும் வயிற்றில் கூட தூங்க நேரிடும்.” என ராணுவ அதிகாரிகள் மீது அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தப் புகார் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளதாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.