இதுவரை உலகில் ஏற்பட்ட மிகப்பெரிய விபத்துகளில், ‘டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய விபத்து’ம் முக்கியமானதாக இருக்கிறது. அட்லாண்டிக் பெருங்கடலில் நிகழ்ந்த அந்தக் கோர விபத்து நடந்து 100 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. ஆனால், அந்த விபத்து ஏற்படுத்திய வடு இன்றும் நம் மனங்களில் வலித்துக்கொண்டிருக்கிறது. தனது முதல் பயணத்தை சந்தோஷமாக ஆரம்பித்த டைட்டானிக் கப்பல் பயணம், அடுத்த சில தினங்களிலேயே இப்படியொரு கோர விபத்தைச் சந்திக்கும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். புது வாழ்க்கையைத் தொடங்குகிறோம் என்ற உற்சாக மனநிலையோடு ஆர்ப்பரித்துச் சென்றவர்களின் எண்ணத்தை இயற்கை, அடியோடு மாற்றியமைத்தது. துரதிர்ஷ்டவசமாக கப்பல் பனிப் பாறையில் மோதி பெரும் விபத்துக்குள்ளானது. அதில், பயணித்த 1,500-க்கும் மேற்பட்ட பயணிகள் இறந்துபோயினர்.
இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகவைத்து எடுக்கப்பட்ட ‘டைட்டானிக்’ திரைப்படம்தான் இந்தத் துயர சம்பவத்தின் வலியை இன்றைய தலைமுறையினர் மத்தியில் பதியச்செய்தது. கப்பல் பனிப் பாறையில் மோதி... அதன், அடிப்பாகத்தில் விரிசல் ஏற்பட்டு... அதன் வழியாக தண்ணீர் உள்ளே வந்ததாகத்தான் டைட்டானிக் திரைப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிக்கும். ஆனால், அந்தக் கப்பல் எல்லா இயற்கைத் தாக்குதல்களையும் தாங்கும் சக்திகொண்டதாக வடிவமைக்கப்படிருந்தது. பின், எப்படி இந்த விபத்து நடந்தது என்று இன்றுவரை கிட்டத்தட்ட நான்கு தலைமுறைகளாக ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்துகொண்டே இருக்கிறார்கள். ஆனால், எந்த ஒரு தெளிவான காரணமும் கிடைக்காதிருந்த நிலையில், பிரபல ஊடகவியலாளரான செனான் மொலாணி, ‘‘டைட்டானிக் கப்பலில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தே இந்த மாபெரும் பேரழிவுக்கு முக்கியக் காரணம்’’ என்று தெரிவித்துள்ளார். ‘‘ஆக, டைட்டானிக் விபத்து பற்றிய இத்தனை வருட ரகசியமும் இவரால் உடைபட்டுவிட்டது’’ என்கின்றனர் டைட்டானிக் ஆராய்ச்சியாளர்கள்.

டைட்டானிக் ஆரம்பமும்... முடிவும்!
உலகின் முதல் நீளமான மற்றும் சொகுசுக் கப்பலான டைட்டானிக் கப்பலின் உணமையான பெயர், ‘RMS TAITANIC’. அதாவது, Royal Merchant Ship TAITANIC. இந்தக் கப்பலை இங்கிலாந்தின் மிகப்பெரிய கப்பல் கட்டும் நிறுவனமான White Star Line கட்ட ஆரம்பித்தது. 1909-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி தொடங்கப்பட்ட இதன் கட்டுமானப் பணி, 1911-ம் ஆண்டு மே 31-ம் தேதி முடிவடைந்தது. 46 டன்னுக்கும் அதிகமான எடை கொண்ட இந்தக் கப்பல், வாணிப நோக்கத்துக்காகக் கட்டப்பட்டது. இப்படி ஒரு கப்பலை இதுவரை உலகம் கண்டிராதலால், அதன் முதல் பயணத்தை மட்டும் மக்கள் செல்வதற்கான பிரத்யேகப் பயணமாக அறிவித்திருந்தது.
இங்கிலாந்தில் சதாம்ப்டன் நகரில் இருந்து... ஃபிரான்ஸ், அயர்லாந்து வழியாக அமெரிக்காவின் நியூயார்க் நகரை அடைவதுதான் அதன் இலக்கு. பல மக்கள், முதல் பயணத்துக்காக டிக்கெட் வாங்க அலைமோதினர். கட்டணம் சற்று அதிகம். அதனால், பெரும்பான்மையானோர் பணக்காரர்களாகவே இருந்தனர். கப்பலின் பணியாளர்கள் 900 பேரையும் சேர்த்து... மொத்தம் 2,224 பேர்களுடன் ‘டைட்டானிக்’ கப்பல் தனது முதல் பயணத்தை 1912-ம் வருடம் ஏப்ரல் 12-ம் தேதி ஆரம்பித்தது. பெரும் மக்கள் கூட்டம் துறைமுகத்துக்கு வந்து வழியனுப்ப, அந்தக் கப்பல் மெதுவாகக் கடல் தண்ணீரைக் கிழித்துக்கொண்டு செல்லத் தொடங்கியது.

கப்பலினுள் மக்கள்... பாடல், நடனம், விருந்து, மது என சகல வசதிகளுடன் தங்கள் புதிய பயணத்தைக் கொண்டாடினர். மூன்றாம் நாள் நள்ளிரவு சரியாக நேரம் 11.40 மணிக்கு, அட்லாண்டிக் கடலில்... சுமார் 220 அடி நீளமுள்ள பனிப் பாறையில் டைட்டானிக் மோதியது. அதன்மீது விரிசல் ஏற்பட்டு தண்ணீர் உள்ளே புக ஆரம்பித்தது. பயத்தால், சிலர் நீரில் குதித்தனர். ஆனால், நீரின் குளிர்ச்சி -2 டிகிரி அழிவைவிடக் குறைவாக இருந்தது. அதாவது, தண்ணீரைக் கொட்டினால் சில நிமிடங்களில் பனிக்கட்டியாகும் நிலைமை. 16 படகுகள் 65 பேரையும், 4 படகுகள் 47 பேரையும் ஏற்றிச் செல்லும் அளவில்... அந்தக் கப்பலில் அவசரப் பாதுகாப்புப் படகு இருந்தது. இதன்மூலம் சுமார் 1,100-க்கும் அதிகமான பயணிகள் தப்பித்து இருக்க முடியும். ஆனால், நீ... நான் என முந்திக்கொள்வதில் ஏற்பட்ட தகராறு காரணமாக வெறும், 710 பயணிகளே தப்பிக்க முடிந்தது. விபத்து ஏற்பட்டவுடன் அருகில்... அதாவது, 98 கிலோமீட்டர் தூரத்தில் இருந்த Carpathia கப்பலுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சரியாக அதிகாலை 4.10 மணிக்கு அந்தக் கப்பல், ‘டைட்டானிக்’ கப்பலை அடைந்தபோது... 1,500-க்கும் அதிகமானோர் தண்ணீரில் விறைத்துப்போய் இறந்திருந்தனர். தன் முதல் பயணத்தைச் சந்தோஷமாக ஆரம்பித்த ‘டைட்டானிக்’ கப்பலின் முடிவு கொடூரமாக அமைந்துபோனது உலக வரலாற்றில் எப்போதுமே ஓர் அழியாத வடுதான்.
விபத்துக்கான பலதரப்பட்ட காரணங்கள்!

கப்பல் சரியான காலநிலையில் தன் பயணத்தைத் தொடங்கவில்லை என்றும், கேப்டனின் அதீத ஆர்வக் கோளாறின் காரணமாகவே கப்பல் பனிப்பாறையில் மோதியது என்றும் பலதரப்பட்ட மக்கள் காரணம் சொல்லி வந்தனர். ஆனால், உண்மையான விபத்துக்கான காரணம் பற்றி இன்றுவரை ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 2008-ம் ஆண்டு ரே பாஸ்டன் என்ற ஆராய்ச்சியாளர், டைட்டானிக் கப்பல் தனது முதல் பயணத்தைத் தொடங்குவதற்கு 20 நாட்களுக்கு முன், கப்பலில் மிகப்பெரிய தீவிபத்து ஏற்பட்டிருக்கிறது என்று அறிவித்திருந்தார். எனினும், ‘உண்மையான காரணம் இதுவல்ல’ எனப் பல ஆராய்ச்சியாளர்கள் எதிர்த்து வந்தனர். இந்த நிலையில் செனான் மொலாணி, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக டைட்டானிக் கப்பலைப் பற்றி, ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தார். கப்பல் கட்டுமானப் பணியில் இருந்தபோது எடுத்த புகைப்படங்கள், பயணத்தைத் தொடங்கத் தயாராக இருந்தபோது எடுத்த புகைப்படங்கள், விபத்து ஏற்பட்டு கடலுக்குள் மூழ்கியபோது எடுத்த புகைப்படங்கள் ஆகியவற்றை ஆராய்ந்தும், பலரைச் சந்தித்தும் தனது ஆராய்ச்சியை மேற்கொண்டு வந்தார். ஆராய்ச்சியின் முடிவில் கப்பல் தனது பயணத்தைத் தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பு... கப்பலில் ஏற்பட்ட மிகப்பெரிய தீவிபத்துதான் இந்தப் பேரழிவுக்குக் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
செனான் மொலாணியின் ஆராய்ச்சி அறிக்கை:
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கப்பல் தனது முதல் பயணத்தைத் தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பே கப்பலின் மத்தியப் பகுதியில் மிகப்பெரிய தீவிபத்து ஏற்ப்பட்டுள்ளது. அதன் காரணமாக அந்தப் பகுதியானது அதிக வெப்பத்தினால் 75 சதவிகிதத்துக்கும் மேல் பலவீனமாக இருந்துள்ளது. விபத்து ஏற்பட்டு கடலில் மூழ்கிய பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்களில்... கப்பல் இரண்டாக உடைந்த இடத்துக்கு அருகில் மிக பெரிய அளவில் கறுப்பு நிற அடையாளங்கள் இருந்துள்ளன. இந்த அடையாளங்கள்... கப்பல் நீரில் மூழ்கும் ஏற்பட்ட தீவிபத்தினால் உருவானது கிடையாது. வாணிப நோக்கத்துக்காகச் செய்யப்பட இந்தக் கப்பலில் கறுமை நிற அடையாளம் பதியப்பட்ட அந்த இடத்தில் எரிபொருட்கள் ஏதும் வைக்கப்படவில்லை. அப்படியிருக்க அந்த இடத்தில் இப்படி ஒரு பிளவு ஏற்பட வாய்ப்பே இல்லை. பயணம் ஆரம்பிப்பதற்கு முன்னாள் ஏற்பட்ட தீவிபத்தால்தான் இந்தப் பகுதி மிக மோசமாகப் பாதிக்கப்படிருக்கிறது. அதனால், இந்தப் பகுதி இரண்டாக உடைந்து மிகப்பெரிய அழிவினை உண்டாக்கியிருக்கிறது. இதுதவிர, இப்படி ஒரு தீவிபத்து ஏற்பட்டதை அந்தக் கப்பலின் உரிமையாளர் பயணிகளிடத்தில் மறைத்துள்ளார். காரணம், சொன்ன நேரத்தில் அந்தக் கப்பல் பயணத்தைத் தொடங்க வேண்டும் என்பதாலும், ஒருவேளை... இதுபற்றித் பயணிகளுக்குத் தெரியவந்தால், இவ்வளவு பெரிய பொருட்செலவில் உருவான அந்தக் கப்பலில் யாரும் பயணிக்க மாட்டார்கள் என்பதாலும், அதனால் நஷ்டம் ஏற்பட்டுவிடும் என்பதாலுமே அவர், இந்த தீவிபத்தைப் பயணிகளிடமிருந்து மறைத்திருக்க வேண்டும்’’ என அதில் தெரிவித்துள்ளார்.
டைட்டானிக் கோர விபத்துக்கு எத்தனை காரணங்கள் சொல்லப்பட்டாலும்... அதன் அழிவு, வரலாற்றிலிருந்து ஒருபோதும் மறையாது என்பதே உண்மை!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.