Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 10, 2017

கீழக்கரை பகுதியில் ஜல்லிகட்டு நடத்த ஆலோசனை கூட்டம் !!


கிழக்கரை பகுதியில் ஜல்லிகட்டு நடத்துவது குறித்து நாளை 11/01/17ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் எம் எம் கே முஹைதீன் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக  அவர் கூறுகையில்

பாரம்பரிய வீர விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டை அவசியம் நடத்தியே தீர வேண்டும் .முன்னெப்போது இல்லாத அளவிற்கு இம்முறை மாணவர்களும், இளைஞர்களும் களத்தில் குதித்துள்ளனர். எனவே ஓவ்வொருவரும் இதில் பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் நமது பகுதியில் ஏதேனும் ஒரு பகுதியில் நடத்த முயற்சிப்போம் ஏற்கெனவே கீழக்கரை சுற்றியுள்ள‌  காஞ்சிரங்குடி, வேளானூர் மற்றும் பல்வேறு கிராமங்களில் எருது கட்டு நிகழ்ச்சி நடந்து வந்தது நாம் ஒன்றிணைந்து முயற்சித்தால்  ஜல்லிகட்டை சிறப்பாக நடத்தலாம் என்றார்

இதற்கான ஆலோசனை கூட்டம் நாளை கீழக்கரையில் நடைபெறும் என்றும் எந்த‌ இடம் என்பது குறித்து கீழ்கண்ட தொலைபேசியில் தொடர்பு கொள்ள கேட்டு கொள்ளப்பட்டுள்ளார்கள்

எம் எம் கே முஹைதீன் இப்ராஹிம்  98840 77333

ஹமீது சுல்தான்  

இப்திஃகார்   99940 41777

எபன்   99944 38294

சிவா ராமலிங்கம்   88700 87213

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.