Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 18, 2017

செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மாணவர்களால் பரபரப்பு



ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவித்து மாநிலம் முழுவதும் மாணவர்கள் வீதிக்கு வந்து கடந்த மூன்று நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விடுமுறை முடிந்து இன்று கல்லூரி திறக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து, வலைதளம் மூலம் இணைந்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பெரிய அளவில் போராட்டம் நடத்திவருகின்றனர்.
இந்நிலையில், மதுரை தமுக்கம் மைதானத்தில், பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் காலை முதல் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்தினர். மாணவியர் அதிக அளவில கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சிலர் ஆவேசத்தில், அருகில் இருந்த 200 அடி உயரமுள்ள பி.எஸ்.என்.எல்.,டவர் மீது ஏறி, போராட்டம் நடத்தினர். ஜல்லிக்கட்டிற்கு தடையை நீக்கினால் தான் கீழே இறங்குவோம், இல்லை என்றால் இங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வோம் என கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.