January 22, 2017
என்ன பண்றதுன்னே தெரியலையே.. ஓ.பி.எஸ்ஸுடன் தமிழிசை அவசர ஆலோசனை
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த நிரந்தரச் சட்டம் இயற்றக்கோரி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மதுரையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்தார்
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை தொடங்கி வைக்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலைய்ல தொடரும் எதிர்ப்பு மற்றும் போராட்டங்கள் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் முதல்வருடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் இயற்றக்கோரி மதுரை அலங்காநல்லூரில் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று அங்கு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தவும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதற்காக மதுரை சென்றுள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் இயற்றும் வரை ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தக்கூடாது என்று கூறிய அவர்கள் முதல்வர் ஓபிஎஸ்க்கு எதிராக சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை பாண்டியன் ஹோட்டலில் தங்கியுள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்துள்ளார். தொடரும் எதிர்ப்புகள் மற்றும் போராட்டங்கள் குறித்து அவர் முதல்வருடன் அவசர ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
என்ன பண்றதுன்னே தெரியலையே.. ஓ.பி.எஸ்ஸுடன் தமிழிசை அவசர ஆலோசனை
Reviewed by மறத்தமிழன்
on
January 22, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
January 22, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.