January 5, 2017
அத்தையின் பெயரை காப்பாற்ற… அரசியலுக்கு வருவேன்..! தீபா அதிரடி..!!
சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளரானதில் அதிருப்தி அடைந்த தொண்டர்கள், அவருக்கு மாற்றாக ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவிற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பேனர், ஃப்ளக்ஸ்கள் வைத்து தீபாவிற்கு தங்களது ஆதரவு தெரிவித்து வந்தனர் தொண்டர்கள். தீபாவின் வீட்டில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் நேரில் சந்தித்து அரசியலுக்கு வரும்படி வலியுறுத்தி வருகின்றனர்.
அதிமுக தொண்டர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு அரசியலுக்கு கண்டிப்பாக வருவேன், அதை விரைவில் அறிவிப்பேன் என்றும் தீபா கூறியிருக்கிறார்.
என்னுடைய அரசியல் பிரவேசம், ஆரோக்கியமானதாகவும், மக்களுக்காக நல்ல முறையில் சேவை செய்வதாகவும் இருக்கும் என்றும், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் புகழை காப்பாற்றுவேன் என்றும் கூறியிருக்கிறார்.
தீபாவின் இந்த அதிரடி முடிவு தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்நிலையில் அதிமுகவின் மேல்மட்ட நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் அடிமட்ட தொண்டர்கள் தீபாவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அத்தையின் பெயரை காப்பாற்ற… அரசியலுக்கு வருவேன்..! தீபா அதிரடி..!!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 05, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 05, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.