Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 23, 2017

எங்களுக்குப் பாதுகாப்பு கொடுத்த இளைஞர்களை இப்படியா துரத்துவீர்கள்.. பெண்கள் ஆவேசம்


எங்களுக்குப் பாதுகாப்பாக இருந்த இளைஞர்களையும், மாணவர்களையும் இப்படியா துரத்துவீர்கள் என்று பெண்கள் ஆவேசமாக கேட்டுள்ளனர்.

சென்னை மெரீனா கடற்கரையில் போராடி வந்த மாணவர்கள், இளைஞர்கள், பெண்களுக்கு கொடுக்க வைக்கப்பட்டிருந்த காலை உணவையும், தண்ணீர் பாட்டில்களையும் போலீஸார் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர். இதற்கிடையே, மாணவர்களை போலீஸார் அப்புறப்படுத்திய செயலுக்கு பெண்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை திடீரென பலப்பிரயோகத்தில் குதித்தது போலீஸ். அமைதியான முறையில் போராடி வந்த மாணவர்களையும், இளைஞர்களையும், பெண்களையும் குண்டுக்கட்டாக தூக்கி கலைத்ததது போலீ்ஸ். பலரை தரதரவென இழுத்துச் சென்று அப்புறப்படுத்தினர். பெண்களையும் கூட விடவி்ல்லை போலீஸ்.

இந்த நிலையில் இன்று காலை சாப்பிடுவதற்காக கொண்டு வரப்பட்டிருந்த உணவையும் கூட போலீஸார் விடவில்லை. அவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர். மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் அங்கு குப்பைகளே இல்லாமல் அற்புதமாக பார்த்துக் கொண்டனர். ஆனால் தற்போது மெரீனா கடற்கை போர்க்களம் போல காணப்படுகிறது.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து பெண்கள் கூறுகையில், கடந்த ஒரு வாரமாக ஒரு பிரச்சினையும் இல்லை. எங்களுக்கெல்லாம் மாணவர்களும், இளைஞர்களும் பாதுகாப்பாக இருந்தனர். எந்தப் பிரச்சினையும் இல்லாமல் பார்த்துக் கொண்டனர். அவர்களை இப்படியா அப்புறப்படுத்துவது.


யாருக்காக போலீஸ். மக்களுக்குத்தானே போலீஸ். அவர்களை விரட்டி விட்டு விட்டு யாரைப் பாதுகாக்கப் போகிறது போலீஸ். அமைச்சர்களுக்கு பாதுகாப்பு தரும் போலீஸ் மக்களை இப்படியா துரத்துவது.
நாங்கள் ஜல்லிக்கட்டு பிரச்சினைக்காக மட்டும் வரவில்லை. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு பிரச்சினைக்காககவும் வந்துள்ளோம் என்று ஆவேசமாக கூறினர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.