January 23, 2017
மீண்டும் திரண்ட இளைஞர்கள்.. மெரீனாவில் தொடரும் மாணவர்கள் போராட்டம்
சென்னை மெரீனா கடற்கரையிலிருந்து தடியடி நடத்தி விரட்டப்பட்ட மாணவர்கள், இளைஞர்கள் மீண்டும் திரண்டு வருகின்றனர்.
தமிழக அரசு, காவல்துறையின் எண்ணத்தைத் தவிடு பொடியாக்கி வருகிறது சென்னை மெரீனா போராட்டம். சிதறி ஓடிய மாணவர்கள் மீண்டும் திரும்பி பெரும் கூட்டமாக கூடி வருகின்றனர். இதனால் மீண்டும் மெரீனா கடற்கறையில் இளைஞர்கள் கூட்டம் ஆக்கிரமித்து விட்டது. தடியடியை தவிடு பொடியாக்கி விட்டனர் மாணவர்களும், இளைஞர்களும், பெண்களும்.
கிட்டத்தட்ட மெரீனாவை மீண்டும் தங்களது கட்டுக்குள் மாணவர்கள் கொண்டு வந்து விட்டனர். போலீஸார் தடுக்கவோ, தடியடி நடத்தவோ முயலாமல் என்ன செய்வது என்று தெரியாமல் அமைதியாக அங்குமிங்கும் போய்க் கொண்டுள்ளனர். முன்பு காமராஜர் சாலையையொட்டி நிறைந்திருந்த இளைஞர் படை தற்போது கடலுக்கு வெகு அருகில் நிலை கொண்டுள்ளது.
சிதறி ஓடிய அத்தனை பேரும் மீண்டும் திரும்பி வருகிறார்கள். இதனால் மீண்டும் மெரீனாவில் இளைஞர் படை ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளது. முன்பு இருந்த பதட்டம் சற்று குறைந்து இளைஞர்களும், மாணவர்களும், பெண்களும் கடற்கரை பரப்பை நிறைத்து அமர்ந்து வருகின்றனர்.
என்னதான் அடித்தாலும், துரத்தினாலும் எங்களது போராட்டம் ஓயாது.. இதுதான் மக்கள் சக்தி.. இதுதான் இளைஞர் சக்தி.. இதுதான் மாணவர் சக்தி.. இதை கலைக்க முனையாதீர்கள் என்பதை காவல்துறைக்கு சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறது மெரீனா எழுச்சி.
மீண்டும் திரண்ட இளைஞர்கள்.. மெரீனாவில் தொடரும் மாணவர்கள் போராட்டம்
Reviewed by மறத்தமிழன்
on
January 23, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
January 23, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.