Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 22, 2017

ஜல்லிக்கட்டு நடத்த எதிர்ப்பு.. மாணவர்களை அடித்து உதைத்த பாஜகவினர்… வேடிக்கை பார்த்த வானதி சீனிவாசன்


ஈரோட்டில் ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற பாஜகவினரை மாணவர்கள் தடுத்துள்ளனர். அவர்களை பாஜகவினர் தாக்கியதில் ஒருவர் காயம் அடைந்துள்ளார். பாஜகவினர் மாணவர்களை அடித்து உதைத்ததை வேடிக்கை பார்த்ததா  வானதி சீனிவாசன்

ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற பாஜகவினரை நிரந்தர சட்டம் தேவை என்று போராடும் மாணவர்கள் தடுத்து நிறுத்தியதால், ஆத்திரம் கொண்ட பாஜகவினர் மாணவர்களை அடித்து உதைத்துள்ளனர். இந்தத் தாக்குதலில் மாணவர் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான வானதி சீனிவாசன் இதனை தடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து தொடர் போராட்டம் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஈரோடு வீரப்பன்பாளையத்தில் பாஜகவினர் ஜல்லிக்கட்டை நடத்த 9 மாடுகளுடன் ஒன்று கூடினார்கள். இதனை ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தும் மாணவர்கள் இதனை கடுமையாக எதிர்த்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர், ஜல்லிக்கட்டுக்காக தொடர்ந்து போராடி வரும் மாணவர்களையும், இளைஞர்களையும் அடித்து உதைத்துள்ளனர். இதில் மாணவர் ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

ஈரோட்டில் ஜல்லிக்கட்டு நடத்த ஒன்று கூடிய கூட்டத்தில் தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசனும் பங்கேற்றுள்ளார். அவரது முன்னிலையில்தான் மாணவர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த தாக்குதலின் போது வானதி சீனிவாசன் அதனை தடுக்காமல் வேடிக்கை பார்த்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மாணவர்கள் மீதான தாக்குதலை பாஜகவினர் நடத்தினாலும், மாணவர்கள், இளைஞர்கள் தொடர்ந்து போராடி பாஜகவினர் ஜல்லிக்கட்டை நடத்தவிடாமல் தடுத்தனர். மேலும், ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரச் சட்டம் கோரி தொடர் போராட்டத்தை அவர்கள் நடத்தி வருகின்றனர்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.