Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 21, 2017

ப்ரீ செக்ஸை முன்வைத்து ஜல்லிக்கட்டு புரட்சியை கொச்சைப்படித்து பேசிய ராதாராஜன் மீது போலீசில் புகார்


பரீ செக்ஸை முன்வைத்து ஜல்லிக்கட்டு புரட்சியை விமர்சித்த 'நாய்' ஆர்வலர் ராதாராஜன் மீது சென்னை போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு புரட்சியில் குதித்த இளைஞர் படையை ப்ரீ செக்ஸை முன்வைத்து விமர்சித்த பீட்டா ஆதரவாளரும் நாய் ஆர்வலருமான ராதாராஜன் மீது சென்னை போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
பல்லாயிரம் ஆண்டுகால தமிழினத்தின் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தற்கு காரணமே பீட்டா என்ற அமெரிக்கா தொண்டு நிறுவனம்தான். தமிழினத்தின் வீதிகள் தோறும் போராடும் இளைஞர்களின் முதன்மை கோரிக்கைகளில் ஒன்று பீட்டாவை தடை செய் என்பதுதான்.


இப்படி லட்சோப லட்சம் இளைஞர்கள் உரிமை புரட்சியில் குதித்ததை ஆபாசமாக கொச்சைப்படுத்தியிருந்தார் பீட்டா ஆதரவாளர் ராதாராஜன். லண்டன் பிபிசி தமிழோசை வானொலிக்கு ராதாராஜன் அளித்த பேட்டியில், ப்ரீ செக்ஸ் டாபிக்கில் டிஸ்கசன் வைத்தால் 50,000 பேர் வருவாங்கதானே அதைப் போன்றதுதான் ஜல்லிக்கட்டு புரட்சியில் குதித்தவர்கள் என விமர்சித்திருந்தார்
.
அவரது இந்த விமர்சனம் ஒட்டுமொத்தமாக தமிழகத்தை கொந்தளிக்க வைத்துவிட்டது. சமூக வலைதளங்களில் ராதாராஜன் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே சென்னை போலீஸ் கமிஷ்னரிடத்தில் சென்னையை சேர்ந்த பொன்னுசாமி என்பவர் இன்று ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் மெரினாவில் போராடுபவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் ராதாராஜன் இழிவாக பேசியுள்ளார்; பெண்களை ஆபாசமாக பேசுதல்; பெண்கள் வன்கொடுமை சட்டம் ஆகிய பிரிவுகளில் ராதாராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.