January 30, 2017
டிரம்ப் நடவடிக்கையால் மூன்றாம் உலகப்போர் நடக்கும்: அமெரிக்கர்கள் எச்சரிக்கை
அமெரிக்கா அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றபின் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு உலக நாடுகளை நடுங்க வைத்துள்ளார். 7 இஸ்லாம் நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை விதித்துள்ளார்.
உலக அளவில் தொழில் செய்து வரும் நிறுவனங்கள் கடுமையான பாதிப்புகளை சந்திக்கும் நிலையை டொனால்ட் டிரம்ப் உருவாக்கி உள்ளார். அமெரிக்காவில் வெளிநாடுகளை சேர்ந்த பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
தொழில் ரீதியாக அமெரிக்காவிற்கு நுழைய முடியாமல் இஸ்லாம் நாட்டு தொழிலதிபர்கள் கடும் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாஷிங்டனிலும், நியூயார்க்கிலும் டிரம்ப் வீட்டு முன் பல்லாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இவரது நடவடிக்கைகளுக்கு சொந்த கட்சியான குடியரசு கட்சி தலைவர்களே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக அமெரிக்கா உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:
பாதுகாப்பு அமைச்சகம், நீதிபதிகள், உள்துறை அமைப்புகளிடம் என யாரிடமும் ஆலோசனை பெறாமல் தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளார். இதனால் உலக நாடுகள் அனைத்தும் அமெரிக்காவை எதிர்க்கும் நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறார் டிரம்ப்.
இது மட்டும் அல்லாமல் மூன்றாம் உலகப்போர் ஏற்படும் நிலைமைக்கு இவரது நடவடிக்கை மாறிவிடுமோ என்று தெரிவித்துள்ளனர்.
டிரம்ப் நடவடிக்கையால் மூன்றாம் உலகப்போர் நடக்கும்: அமெரிக்கர்கள் எச்சரிக்கை
Reviewed by மறத்தமிழன்
on
January 30, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
January 30, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.