Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 17, 2017

அலங்காநல்லூரா? அடங்காநல்லூரா? கடுங்குளிரிலும் விடிய விடிய போராட்டம்



மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி இளைஞர்கள் பங்கேற்று முன்னெடுக்கும் போராட்டம் விடியவிடிய தொடரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் மக்க்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த உச்சநீதிமன்றம் கடந்த 2014ஆம் ஆண்டு தடை விதித்தது. இருப்பினும், தடையை மீறி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க வேண்டி இளைஞர்களும் பொதுமக்களும் திங்கட்கிழமை போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். திங்கட்கிழமை காலை தொடங்கிய போராட்டம் தொடர்ந்து விடியவிடிய நடைபெற்று வருகிறது. கடும் குளிரையும் தாங்கிக்கொண்டு இந்தப் போராட்டத்தை அவர்கள் நடத்திக்கொண்டிருக்கின்றனர்.
இப்போராட்டத்தில் ஊர் பொதுமக்களும் கலந்துகொண்டு இளைஞர்களின் போராட்டத்திற்கு துணை நிற்கின்றனர். அவர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் உணவு, சிற்றுண்டி மற்றும் சுக்குக்காப்பி தயாரித்து வழங்கியுள்ளனர். ஏராளமான பெண்களும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டிருக்கின்றனர்.
சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் நேரில் வந்து இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஜி.ராமகிருஷ்ணன் (மா.கம்யூ.,), திருமாவளவன் (வி.சி.க.,) முத்தரசன் (இந்தய கம்யூ.,) தமிழிசை சௌந்தர்ராஜன் (பாஜக), சி.ஆர்.சரஸ்வதி (அதிமுக), சீமான் (நாம் தமிழர்) உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப், காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், நடிகர்கள் ரோபோ சங்கர், விஷ்ணு விஷால் போன்றவர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். வெளிநாடு வாழ்தமிழர்களும் அலங்காநல்லூர் போராட்டத்தைப் பற்றி அறிந்து தாங்கள் வசிக்கும் நாட்டிலேயே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவுக்குரல் கொடுக்கவுள்ளதாகவும் கூறிவருகின்றனர்.
இந்நிலையில், போராட்டக்காரர்களை அமைதியாகக் கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் இன்று காலை 6 மணியளவில் மைக் மூலம் அறிவித்தனர். காவல்துறையின் அறிவிப்புக்கு யாரும் செவிசாய்க்காத நிலையில், போராட்டக்காரர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் கைதுசெய்து காவல்துறை பேருந்தில் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். இதன் மூலம் 21 மணிநேரம் நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. இருப்பினும், அப்பகுதியில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.