January 29, 2017
பயிர் அழுகியதால் மனமுடைந்த விவசாயி தற்கொலை!
உளுந்து பயிர் அழுகியதால் மனமுடைந்த விவசாயி, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காட்டுமன்னார்கோயில் பகுதி விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள பிள்ளையார்தாங்கல் சாவடி கிராமத்தை சேர்ந்த சுந்தரகண்ணு விவசாயி, இரண்டு ஏக்கர் நிலம் குத்தகைக்கு எடுத்து மானாவரி பயிரான உளுந்து பயிரிட்டு வந்துள்ளார்.
இதற்காக அவர் தனியார் வங்கியில் 50 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் காலம் தவறி பெய்த கனமழையினால், உளுந்து பயிர் முற்றிலும் அழுகியுள்ளது.
இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த அவர், வங்கி கடனை எவ்விதம் திருப்பி செலுத்துவது என்ற மனநிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
வங்கி கடனுக்காக விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அப்பகுதி விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பயிர் அழுகியதால் மனமுடைந்த விவசாயி தற்கொலை!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 29, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 29, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.