January 9, 2017
சினிமா பிரபலங்களை ஃபேஸ்புக் மூலம் ஏமாற்றிய சென்னை இளம்பெண் கைது
சென்னையை சேர்ந்த 26 வயது இளம்பெண், சினிமா பிரபலங்களை நூதன வகையில் ஏமாற்றியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையை சேர்ந்த ஸ்வேதா சுரேஷ் என்ற 3 வயது குழந்தைக்கு தாயான இவர், சினிமா பிரபலங்கள் உள்பட பலரிடம் உலகம் முழுவதும் பயணம் செய்ய சலுகை விலையில் விமான டிக்கெட் எடுத்துத் தருவதாக ஃபேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டு லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளார்.
இவரிடம் ஏமாந்தவர்களில் பிரபல பாடகர் தேவன் ஏகாம்பரம், எஸ்.வி.சேகர் ஆகியோர்களும் அடங்குவர். பேஸ்புக் மூலமும், நேரிலும் பிரபலங்களை அணுகி உலகம் முழுவதையும் விமானத்தில் சுற்றி பார்க்க ரூ.1.25 லட்சத்த்ல் விமான டிக்கெட்டுக்களை வாங்கித் தருவதாக கூறியுள்ளார். ஆனால் அவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு காலாவதியான டிக்கெட்டுக்களை கொடுத்து ஏமாற்றியுள்ளார்.
இதுகுறித்து காவல்துறையினர்களிடம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஸ்வேதா சுரேஷை போலீசார் கைது செய்தனர். அவர் மீது இபிகோ 406,420 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சினிமா பிரபலங்களை ஃபேஸ்புக் மூலம் ஏமாற்றிய சென்னை இளம்பெண் கைது
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 09, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 09, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.