January 18, 2017
தீவிரமடையும் போராட்டம்.. சென்னையில் உள்ள தனியார் மற்றும் அரசு கல்லூரிகளுக்கு நாளை முதல் விடுமுறை
மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமடைந்து வரும் வேளையில் சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு நாளை முதல் விடுமுறை அளிப்பதாக கல்லூரி நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.
ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை மெரினாவில் இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள், நடத்தி வரும் போராட்டம் இரண்டாவது நாளாக தீவிரமடைந்துள்ளது. மெரினாவில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இளைஞர் படை மெரினா நோக்கி வந்துகொண்டிருக்கிறது. 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு மேல் இளைஞர்கள் குவிந்து உள்ளனர். சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் சிலர் மண்ணில் புதைந்து கொண்டு போராட்டம் நடத்துக்கின்றனர்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலியாக சென்னையில் உள்ள 31 அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு நாளை முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து கல்லூரிகளிலும், அந்தந்த கல்லூரி நிர்வாகங்களே விடுமுறையை அறிவித்துள்ளது.
அம்பேத்கார் சட்டபல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் சட்டப்பள்ளி்க்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரமடையும் போராட்டம்.. சென்னையில் உள்ள தனியார் மற்றும் அரசு கல்லூரிகளுக்கு நாளை முதல் விடுமுறை
Reviewed by மறத்தமிழன்
on
January 18, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
January 18, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.