Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 2, 2017

பெட்ரோல், டீசல் விலை உயர்வு சிலிண்டர் விலை அதிகரிப்பு



புத்தாண்டு தொடங்கிய ஜனவரி முதல் தேதியே பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிகரித்துவிட்டன.பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.29 காசுகளும், டீசல் லிட்டருக்கு 97 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்குவரும் என அறிவிக்கப்பட் டுள்ளது. மாதந்தோறும் விலை உயர்வை அறிவிப்பது வாடிக்கையாகி விட்டது.

புத்தாண்டு தினத்தை நாடு முழுவதும் மக்கள் உற்சாகமாகக் கொண்டாடி வந்த நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் மானியத்துடன் பெறும் கேஸ் சிலிண்டரின் விலையை ரூ. 2 அதிகரித்துவிட்டது. புத்தாண்டு தினத்தன்று மத்திய பாஜக அரசு ஏதாவது சலுகைகள் அறிவித்து தங்களை மகிழ்விக்கும் என நினைத்திருக்கலாம். ஆனால், புத்தாண்டு தினத்தன்று 14.2 கிலோ எடைகொண்ட மானிய சிலிண்டர் ஒன்றின் விலை (தில்லி நிலவரம்) 432.71-லிருந்து ரூ.434.71-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.