Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 18, 2017

சசிகலா காலில் நான் ஏன் விழுகிறேன்..? - ஓபிஎஸ் அதிரடி விளக்கம்...!



தமிழகத்தின் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அதிமுக பொது செயலாளர் சசிகலா காலில் விழுந்த புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது.

இதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், ஓ.பி.எஸ்க்கு நெருக்கமான அமைச்சர்கள் இதுகுறித்து அவரிடம் கேட்டதாக தெரிகிறது.

அதற்கு பதிலளித்த அவர், முதல்வர் பதவி என்பது என்னுடைய விசுவாசத்துக்குப் பரிசாக, மறைந்த ஜெயலலிதா அளித்தது.

அதன் காரணமாகவே தற்போது மூன்றாவது முறையாக நான் முதல்வராக இருக்கிறேன்.

நான் இப்போது தன்னிச்சையாக செயல்படுவது சிலருக்குப் பிடிப்பதில்லை. என்னை, பல வழிகளிலும் செயல்படவிடக்கூடாது என முயற்சிக்கின்றனர்.

முதல்வராக இருக்கும் நானே, அவர்கள் காலின் கீழே என காட்ட தான் என்னை அவர்கள் காலில் விழ சொன்னார்கள்.

இதனால் என் கெளரவம் குறைந்து விடாது, என்னை காலில் விழ சொன்னவர்கள் மேல் தாம் மக்களுக்கு வெறுப்பு ஏற்படும்.

என் மேல் மக்களுக்கு பரிதாபம் தான் ஏற்படும் என தன்னுடைய நியாயத்தை விளக்கினாராம் ஓபிஎஸ்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.